twitter

    விமர்சகர்கள் கருத்து

    • கோபத்தில் இருக்கும் அத்தையை சமாதானப்படுத்த, வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் மருமகனின் கதை தான் வந்தா ராஜாவாதான் வருவேன். உலக நாடுகளில் விரல்விட்டு எண்ணக் கூடிய பணக்கார குடும்பத்தில் பிறந்தவர் சிம்பு. தாத்தா நாசருக்கு சண்டை போட்டு பிரிந்து போன தனது மகள் ரம்யாகிருஷ்ணனை பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. ஆனால் அது சாத்தியமில்லை என்கிறார் சிம்புவின் அப்பா சுமன்.தாத்தாவின் ஆசைக்காக தனது பரிவாரங்களுடன் அத்தையை தேடி சென்னை வருகிறார் மருமகன் சிம்பு. அத்தையை சந்தித்து எப்படி சமாதானம் செய்கிறார் என்பதை தனது வழக்கமாக கலகல காமெடி திரைக்கதையில், செண்டிமெண்ட், ரெலாமான்ஸ், மாஸ் ஆக்ஷன் மசாலா தூவி பரிமாறியிருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி.

      சிம்பு - சுந்தர்.சி கூட்டணியில் வரும் முதல் படம் என்பதால், இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. அதனை முடிந்தவரை பூர்த்தி செய்திருக்கிறார்கள். காமெடி, செண்டிமெண்ட், ரொமான்ஸ், குத்து பாட்டு, மாஸ் ஆக்ஷன், பஞ்ச் டயலாக் என ஒரு புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி தான் படம் பார்த்துவிட்டு வெளியவரும் போது ஏற்படும். வழக்கமான அத்தை - மருமுகன் இடையிலான போட்டி, சண்டை என படத்தை நகர்த்தாமல், படத்தை ஜாலியாக தந்துள்ளது ரசிக்க வைக்கிறது.