twitter

    வருத்தப்படாத வாலிபர் சங்கம் கதை

    வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2013ல் வெளியான நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும். இதை இயக்குனர் பொன்ராம் இயக்கினார். இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சத்யராஜ் மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்சு நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். இதன் இசையமைப்பாளர் இமான் ஆவார். வசனங்கள் எழுதியவர் ராஜேஷ். இத்திரைப்படம் செப்டம்பர் 6, 2013ல் வெளியானது.

    கதை

    சிவனாண்டி மற்றும் பழனியாண்டி கூட்டங்களுக்கு இடையே உள்ள மோதலுடன் ஆரம்பிக்கிறது இத்திரைப்படம். சிவனாண்டி தன் மகளையே கொன்றதாக அவர் கூட்டத்தைச் சேர்ந்தவர் காவல் நிலையத்தில் பெருமைப்பட்டுக் கொள்கிறார். அங்கு இருக்கும் ஒரு காவலர் அதை பற்றி ஊரில் விசாரிக்க, கிணறு வெட்ட பூதம் கிளம்பியதுப் போல சிவனாண்டி மீது பழி விழுகிறது. காவல் துறையினர் சிவனாண்டியை கொலை நடந்ததாக கூறப்படும் இடத்திற்கு அழைத்து செல்ல, அங்கே பின்னோக்கி நகர்கிறது கதை. அதே ஊரில் போஸ்பாண்டி, கோடி இருவரும் வருத்தபடாத வாலிபர் சங்கம் எனும் சங்கத்தை நடத்தி வருகின்றவர்கள். சிவனாண்டியின் மகள் லதா பாண்டி படிக்கும் பள்ளியின் ஆசிரியை கல்யாணியை ஒருதலையாக போஸ்பாண்டி காதலிக்கிறார்.

    கல்யாணிக்கு காதல் கடிதம் எடுத்து செல்லச்சொல்லி, லதா பாண்டியை போஸ்பாண்டி வற்புறுத்துகிறார். ஆனால், கல்யாணிக்கு வேறொருவருடன் நிச்சயம் ஆகிறது. இதற்கு நடுவே, சிவனாண்டி லதாபாண்டிக்கு, பதினெட்டு வயதுக்கு முன்னரே கல்யாணம் செய்து முடிக்க முற்படுகிறார். திருமணம் பற்றிய அறிவிப்பைக் கண்டு, காவல் துறைக்கு புகார் அளிக்கின்றனர் போஸ்பாண்டியும் கோடியும். இதனால் லதாபாண்டியின் கல்யாணம் நிற்கிறார். கல்யாணத்தை நிறுத்தியது போஸ்பாண்டி என்று தெரிந்தவுடன், லதாபாண்டிக்கு போஸ்பாண்டியின் மீது காதல் ஏற்படுகிறது.

    ஊர் திருவிழாவில் போஸ்பாண்டிக்கும் லதாபாண்டிக்கு மேல் காதல் ஏற்படுகிறது. தன மகள் கல்யாணத்தை நிறுத்தியது போஸ்பாண்டிதான் என்று தெரிந்துக் கொண்ட சிவனாண்டி கூட்டம், போஸ்பாண்டியைத் தாக்குகிறது. உதவுவது போல வரும் சிவனாண்டி, சூசகமாக அவனை மிரட்டுகிறான். ஆத்திரம் அடைந்த போஸ்பாண்டி, சிவனாண்டி உயிருக்கும் மேலாக எண்ணும் துப்பாக்கியை கோடியுடன் சேர்ந்து திருட, சிவனாண்டியின் தூக்கத்தில் நடக்கும் வியாதி தான் அது காணமல் போக காரணம் என கூறி லதாபாண்டியின் உதவியுடன் அந்த துப்பாக்கி வீட்டுக்கு திரும்புகிறது. இதனிடையே போஸ்பாண்டிக்கும் தன் மகளுக்கும் காதல் இருப்பதை அறிந்த சிவனாண்டி, அவளுக்கு அவசரமாக திருமணம் நடத்த முனைகிறான். திருமணத்திற்கு முன் இரவு, லதாபாண்டி போஸ்பாண்டியுடன் ஊரை விட்டு ஓடிவிட, சிவனாண்டி அவர்களை கொன்றதாகக் கூறுகிறார். ஆனால், இரவோடு இரவாக ஓடிய இருவரையும் வாழ்த்தி திருமணம் செய்து வைக்கிறார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie வருத்தப்படாத வாலிபர் சங்கம் with us? Please send it to us ([email protected]).