twitter

    விமர்சகர்கள் கருத்து

    • கடைசி 15 நிமிடங்கள் மட்டுமே படம் விறுவிறுப்பாக இருக்கிறது. முதல் பாதி படத்தில் ஏனோதானோவென நகர்கிறது. தேவையில்லாத காதல் காட்சிகள், பாடல்கள் என செம போரிங். அதுவும் காமெடி என்ற பெயரில் கஞ்சா கருப்பு செய்யும் அலப்பறைகள், நமக்கு கோபத்தை தான் வரவழைக்கிறது.

      இரண்டாம் பாதியில் கபடி மேட்சும், சூரியின் காமெடியும் கொஞ்சம் மனநிம்மதி தருகிறது. ஆனால் கறிக்குழம்பு காமெடி சிரிப்பை வரவைத்தாலும், அருவருப்பின் உச்சம். க்ளைமாக்ஸ் காட்சியில் யாரையாவது சாகடிக்க வேண்டும் எனும் செண்டிமெண்டுக்காக ஒருவரை பலிகடாவாக்கி இருக்கிறார்கள்.

      விஷ்ணு விஷால், சூரி உள்பட முதல் பாகத்தில் நடித்த அனைவருக்கும் பெரிய அடையாளத்தை கொடுத்த படம் வெண்ணிலா கபடிக்குழு. ஆனால் இந்த படம் யாருக்கும் அடையாளத்தை ஏற்படுத்தி தருவதற்கு வாய்ப்பில்லை.