twitter
    Tamil»Movies»Mersal»Movie Trivia

    மெர்சல்

    (U/A) (2017)

    ரசிகர்கள் கருத்து

    வெளியீட்டு தேதி

    18 Oct 2017
    Trivia
    பைரவா படத்தினை தொடர்ந்து விஜய் - அட்லீயின் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் விஜய் 61.  இத்திரைப்படத்தில் சத்யராஜ், வடிவேலு, ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா, எஸ்.ஜே.சூர்யா, கோவை சரளா, சத்யன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தனர். 

    ஆனால், தற்போது, நடிகை ஜோதிகா திடீரென்று படத்திலிருந்து விலகியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக ஜோதிகா படத்திற்கு தனது கதாப்பாத்திரத்திற்க்காக உடை வடிவமைப்பு மற்றும் அனைத்து வேலைக்களையும் முழு ஒத்துழைப்புடன் முடித்துவிட்டார். 

    இந்நிலையில், படப்பிடிப்பு துவங்குவதற்கு முந்தைய நாள், தன்னால் இப்படத்தில் நடிக்க முடியாது எனவும் தான் விலகிக்கொள்வதாகவும் அறிவித்துவிட்டார். விஜய் மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்கும் காட்சிகளை 28 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்த படக்குழு தற்பொழுது, விஜய் தனியாக நடிக்கும் காட்சிகளை மட்டும் எடுக்க திட்டமிட்டுள்ளது. 

    படத்தில், ஜோதிகாவுக்கு பதில் நடிகை நித்யா மேனனை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது.