twitter
    Tamil»Movies»Vikram Veda»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • எந்த ஒரு இயக்குநர்கிட்டயுமே அவரோட ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் இடையில ஒரு மிகப்பெரிய முன்னேற்றத்தை பார்க்குறது ரொம்பக் கஷ்டம். குறிப்பா காட்சிப்படுத்துதல். ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு ஸ்டைல் மற்றும் ஒரு தரம் இருக்கும். அந்தத் தரத்துலதான் நமக்கு படம் குடுப்பாங்க. திருட்டுப் பயலே எடுத்த சுசி கணேசன் பெரிய பட்ஜெட்ல கந்தசாமி எடுத்தாலும் அது சுசி கணேசனோட தரத்துலதான் இருக்குமே தவிர ஷங்கரோட தரத்தில் இருக்காது.

      விஜய் சேதுபதி அதுக்கும் மேல. பட்டையக் கெளப்பிருக்காரு. அவருக்குண்ணே அளவெடுத்து செஞ்ச மாதிரியான கேரக்டர். வியாசர்பாடி ஸ்லாங்குல பூந்து விளையாடுறாரு. அவருக்கே உரித்தான ஸ்டைல்ல அந்த "அய்யோயோ.. அள்ளு இல்லை"ன்னு சொல்லும்போது தியேட்டரே குலுங்குது. அதுவும் அந்த தீம் மியூசிக்கும் அதுக்கும் இண்ட்ரோவெல்லாம் தாறுமாறு.

      எல்லாரும் கண்டிப்பா பார்க்க வேண்டிய ஒரு சூப்பர் எண்ட்ர்டெய்னர். மிஸ் பண்ணிடாதீங்க.