twitter
    Tamil»Movies»Visaranai
    விசாரணை

    விசாரணை

    Release Date : 05 Feb 2016
    4/5
    Critics Rating
    2.5/5
    Audience Review
    விசாரணை தமிழ் அதிரடி திகில் திரைப்படம். இத்திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கி தயாரித்துள்ளார். இப்படத்தின் நடிகர் நடிகைகள் அட்டகத்தி தினேஷ், சமுத்திரகனி, முருகதாஸ், ஆனந்தி மற்றும் மிஷா கோஷல் ஆகியோர் நடித்துள்ளனர்.

    கதை : 
    ஆந்திரா மாவட்டம் குண்டூரில் உள்ள பூங்கா ஒன்றில் நான்கு தமிழ் இளைஞர்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக யாருமில்லை என்பதை அறிந்து ஒரு திருட்டு வழக்கில் கைது செய்கின்றனர். இவ்வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. கைதான நால்வர் தங்கள் தரப்பில் தவறில்லை என்று நீதிபதியிடம் முறையிடுகின்றனர். ஆனால், அங்கு மொழி புரியாத காரணத்தினால், தமிழ்...
    • வெற்றிமாறன்
      வெற்றிமாறன்
      Director/Producer
    • தனுஷ்
      தனுஷ்
      Producer
    • ஜி வி பிரகாஷ் குமார்
      ஜி வி பிரகாஷ் குமார்
      Music Director
    • tamil.filmibeat.com
      0/5
      வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி விமர்சகர்கள், ரசிகர்களிடம் தொடர்ச்சியாக பாராட்டுகளைக் குவித்து வரும் விசாரணை படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?

      நாம் அனைவருமே காவல்துறையின் விசாரணை பற்றி கேள்வி மட்டுமேபட்டுள்ளோம். ஆனால் அந்த விசாரணைக்கு பின்னர் முகம் தெரியாத அரசியலும், அதிகாரமும் மறைந்து இருக்கிறது என்பதை விசாரணை படத்தின் மூலம் துல்லியமாக வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குநர் வெற்றி மாறன்.

      "இத்திரைபடத்தில் சம்பவங்களும் காட்சிகளும் பொதுவான நிலைமை சார்ந்த புனைவுகளே தவிர யாரையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டதல்ல" என்று கார்டு போட்டு படம் ஆரம்பிக்கும் விதத்திலேயே கவனம் ஈர்க்கிறது இயக்குநரின் தைரியம்.

      எம்.சந்திரகுமாருக்கு மரியாதை செய்ததிலும், உண்மையை எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் படமாக்கிய விதத்திலும், பெயரில் இருக்கும் வெற்றியை மீண்..