twitter
    Tamil»Movies»Vishwaroopam 2»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • விஸ்வரூபமும் 2வின் முதல் பாகம் லண்டனில் பயணிக்கிறது. ஹிட்லர் காலத்து கப்பல் ஒன்று கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்படுகிறது. அதன் மூலம் சுனாமியை உருவாக்கி லண்டனை அழிக்க திட்டமிடும் தீவிரவாதிகளின் சதியை கமல் முறியடிக்கிறாரா என்பது தான் கதைக்களம். இப்படத்திலும் ஒமரும், சலீமும் தங்களது திட்டங்களைத் தொடர்கின்றனர். கமலைக் கொல்லத் துரத்துகின்றனர். ஹெலிகாப்டர்கள் பறக்கின்றன, ஏவுகணைகள் வீசுகின்றனர், அடிதடி, கொலை என பெரும்பாலான காட்சிகளில் ரத்தவாடை.

      விஸ்வரூபம் முதல் பாகத்தில் ஸ்லோவாக நகரும் படத்தை, ஒரு சண்டைக்காட்சி மூலம் விறுவிறுப்பாக்கி இருப்பார் கமல். அதேபோன்று இப்படத்திலும் காட்சிகள் இருக்கும் என எதிர்பார்த்தால், ஏமாற்றம் தான். உளவாளி படம் என்றால் எவ்வளவு விறுவிறுப்பாக படம் நகர வேண்டும். ஆனால், இப்படத்தில் அது மிஸ்ஸாவது மிகப்பெரிய மைனஸ்.

      இப்படத்தில் குறுகிய நேரத்தில் நிறைய விசயங்களைச் சொல்ல முற்பட்டு கமல் தடுமாறியிருக்கிறார் என்று தான் கூற வேண்டும். இங்கிலாந்தில் இல்லாத ஆபிசர்களா? டர்ட்டி பாமை ஒளிப்பதற்காக இந்தியாவில் இருந்து லண்டன் சென்று போராடும் உளவுத்துறை அதிகாரிகள் கதாபாத்திரம் மிகையாக இருக்கிறது. அதுவும் கப்பலைத் தேடி பூஜாவுடன், கமலே நேரடியாகச் செல்லும் காட்சிகள்.. நோ கமெண்ட்ஸ்.