twitter
    Tamil»Movies»Zhagaram»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • ரூ,10 லட்சம் பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுத்து அதனை ரிலீசும் செய்திருக்கிறார் இயக்குனர் கிரிஷ். ரூ.10 லட்சத்தில் என்ன எடுக்க முடியுமா, அதற்கு மேலேயே சிறப்பாக ஒரு படத்தை எடுத்திருக்கிறார்.

      புதையலை தேடி செல்லும் நந்தா, அதன் மர்ம குறிப்பிகளை ஒவ்வொன்றாக கண்டுபிடிக்கும் காட்சிகள் சுவாரஸ்யமாக அமைந்துள்ளன. படம் முழுவதும் இந்த சுவராஸ்யம் நீட்டித்து இருக்கிறது. புராஜெக்ட் அக் நாவை தழுவி எடுக்கப்பட்ட கதை தான் என்றாலும், நிறைய விஷயங்களை ஆராய்ந்து, படித்து தெரிவிந்துகொண்டு, படத்தை எடுத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுகள்.

      ஒரு இயக்குனரின் கனவை நிறைவேற்றுவதற்காக சம்பளம் வாங்காமல் நடித்துக்கொடுத்த நந்தாவுக்கு வாழ்த்துக்கள். படத்திற்கு தேவையான நடிப்பை மிகையில்லாமல் கொடுத்திருக்கிறார்.