முப்பொழுதும் உன் கற்பனைகள் இசை வெளியீடு!
எல்ரெட் குமார் இயக்கத்தில் ஆர் எஸ் இன்போடெய்ன்மெண்ட் தயாரித்துள்ள முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தின் இசை வெளியீடு ஞாயிற்றுக்கிழமை சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது.
இயக்குநர்கள் கவுதம் மேனன் மற்றும் கே வி ஆனந்த் இசைத் தகட்டை வெளியிட்டனர்.
அதர்வா, அமலா பால் நடித்துள்ள இந்தப் படம் ஒரு காதல் கதை. எனவே காதலைக் கொண்டாடும் விதத்தில் அரங்கத்தை அலங்கரித்திருந்தனர்.
இரண்டு பாடல்கள் மற்றும் ஒரு ட்ரெயிலரை திரையிட்டுக் காட்டினர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் படமாக்கப்பட்ட பாடல் கண்ணைக் கவரும் வகையில் அமைந்திருந்தது.
ருக்மினியின் பாலே நடனமும், படத்தின் பாடல்களை பாபா செகல், மாயா, சிதாரா ஆகியோர் மேடையில் பாடியதும் ரசிகர்களைக் கவர்ந்தன.
எல்ரெட் குமார் முதல் முறையாக இயக்கியுள்ள படம் இது. ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











