Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
ஜெனீவாவில் தில்லுமுல்லு, சுட்டகதை, நளனும் நந்தினியும் இசைவெளியீட்டு விழா!
சென்னை: வேந்தர் மூவிஸ் தயாரித்த தில்லு முல்லு உள்பட 3 படங்களின் இசை வெளியீட்டு விழா சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் நடக்கிறது. அத்துடன் எதிர்நீச்சல் படத்தின் வெற்றி விழாவையும் ஜெனீவாவில் நடத்துகின்றனர்.
வேந்தர் மூவிஸ் சார்பில் எஸ்.மதன் தயாரிக்கும் படம் 'தில்லு முல்லு'. இது ரஜினி நடித்த 'தில்லு முல்லு' படத்தின் ரீமேக். சிவா, இஷா தல்வார் நடித்துள்ளனர், பத்ரி இயக்கியுள்ளார்.
மேலும் சுட்டகதை, நளனும் நந்தினியும் ஆகிய இரு படங்களை வேந்தர் மூவீஸ் வாங்கி வெளியிடுகிறது.
இந்த மூன்று படங்களின் இசை வெளியீட்டை சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் நடத்துகின்றனர்.
வேந்தர் மூவிஸ் வாங்கி வெளியிட்ட 'எதிர்நீச்சல்' படம் படத்தின் வெற்றி விழாவையும் அத்துடன் சேர்த்து நடத்துகின்றனர்.
ஜெனீவாவில் உள்ள விக்டோரியா அரண்மனையில் ஜூன் 1 ம் தேதி இவ்விழா நடக்கிறது. இதில் இத்தாலிய கலைஞர்களின் நடன நிகழ்ச்சி மற்றும் தமிழ் பாடகர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.
இவ்விழாவுக்கு பாரிவேந்தர் தலைமை தாங்குகிறார். தனுஷ், சிவகார்த்தி கேயன், பிரியா ஆனந்த், சிவா, பிரகாஷ்ராஜ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.