ஆஹா கல்யாணம்... யாஷ் ராஜ் பிலிம்ஸின் முதல் தமிழ்ப் பட இசை வெளியீடு!
சென்னை: இந்தியாவின் புகழ்பெற்ற படத் தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் முதல் முறையாக தமிழில் படம் தயாரிக்கிறது.
ஆஹா கல்யாணம் என்ற இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார்.
நான் ஈ புகழ் நானி, புதுமுகம் வாணி கபூர் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீடு இன்று லீலா பேலஸ் ஓட்டலில் நடந்தது.

திருமண மேடை போல
வழக்கமான நிகழ்ச்சியாக இல்லாமல் புதுமாதிரியாக, திருமண மேடை போல அமைத்து, அதில் நடிகர் நடிகைகளை அழைத்து பாடல்களை அறிமுகம் செய்ய வைத்தார்கள்.

வேட்டி சட்டையில்
அதேபோல விழாவுக்கு வந்திருந்த ஹீரோ நானி உள்ளிட்ட படக்குழுவினர் வேட்டி சட்டை மற்றும் புடவையில் வந்திருந்தனர்.

விஜய் சேதுபதி
படத்தின் முதல் பாடலான 'தல தல'-யை நடிகர் விஜய் சேதுபதி அறிமுகம் செய்தார். ரஜினி, விஜய், அஜீத்தின் பஞ்ச் வசனங்களை வைத்தே இந்தப் பாடலை உருவாக்கியிருந்தனர்.
'நானி எனது மிகச் சிறந்த நண்பர்' என்று கூறிய விஜய் சேதுபதி, அவருடனான முதல் சந்திப்பிலிருந்தே இருவரும் நெருக்கமாகிவிட்டதாகக் குறிப்பிட்டார்.

விஷ்ணுவர்தன்
இரண்டாவது பாடலை இயக்குநர் விஷ்ணுவர்தன் அறிமுகம் செய்து வைத்தார். விஷ்ணுவர்தனின் உதவியாளராக இருந்தவர்தான் படத்தின் இயக்குநர் கோகுல்கிருஷ்ணா என்பது குறிப்பிடத்தக்கது.

தரணி
மூன்றாவது பாடலான கதகதகத கேளு பாடலை இயக்குநர் தரணி அறிமுகம் செய்தார். வட இந்திய ஸ்டைலில் உருவாக்கப்பட்ட மெகா பிரமாண்ட பாடலாக இது அமைந்திருந்தது.

தரண்குமார்
தரண்குமார் இசையில் மொத்தம் 9 பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. இந்திப் படத்தின் ரீமேக் இது என்பதால், தமிழுக்கேற்றபடி இசையை உருவாக்கியதாக தரண் தெரிவித்தார்.

சிம்ரன்
இந்தப் படத்தில் நடிகை சிம்ரன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து மேடையில் அவர் கூறுகையில், 'யாஷ்ராஜ் பிலிம்ஸ் என்ற பெயர்தான் இந்தப் படத்தில் தன்னை நடிக்க வைத்ததாக'க் குறிப்பிட்டார்.

உஷா உதுப்
இந்தப் படத்தில் பிரபல இந்திய பாப் பாடகி உஷா உதுப் ஒரு பாடல் பாடியுள்ளார். இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் அந்தப் பாடலை மேடையில் லைவாக பாடிக் காட்டினார்.


Click it and Unblock the Notifications











