முடியல.. விஷால் படம்னா உடனே ‘அழகே’ன்னு ஒரு பாட்ட போட்டுறாங்களே!

சென்னை: தமிழ் சினிமாவில் அழகு என்ற வார்த்தையில் தொடங்கும் பல பாடல்கள் வெளியாகியுள்ளன.

அதிலும், குறிப்பாக விஷால் படங்களில் தொடர்ந்து அழகு என்று தொடங்கும் பல பாடல்கள் வந்து வெற்றியடைந்துள்ளன.

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் படத்திலும் உருவாகியுள்ள 'அழகே' என்ற பாடலின் முழு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ஆக்‌ஷன்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, பழ. கருப்பையா, ராம்கி, கபிர் சிங் துஹான், யோகி பாபு, சாயா சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் திரைப்படம் வரும் நவம்பர் 15ம் தேதி திரைக்கு வருகிறது.

கனவு படம்

கனவு படம்

விஷாலின் ஆக்‌ஷன் படம் இயக்குநர் சுந்தர்.சியின் கனவு படம் என நேற்று நடந்த பிரஸ் மீட் நிகழ்ச்சியில் சுந்தர்.சி தெரிவித்துள்ளார். மேலும், ஆக்‌ஷன் படம் குறித்து பேசிய நடிகை தமன்னா, நிறைய ஸ்டன்ட்டுகளை கஷ்டப்பட்டு போட்டுள்ளதாகவும், நிறைய அடிகளையும் பட்டதாகவும் தெரிவித்தார்.

எத்தனை அழகு

எத்தனை அழகு

விஷால், த்ரிஷா, சுனைனா நடிப்பில் வெளியான சமர் படத்தில் ‘அழகோ அழகு' பாடல் யுவன் இசையில் இடம் பெற்றிருக்கும். அதேபோல, கதகளி படத்தில் கேத்தரின் தெரசாவை அழகே நீ அசைந்தால் என விஷால் பாடியிருப்பார். பின்னர், இரும்புத்திரையில் சமந்தாவை பார்த்து அழகே என பாடியிருந்தார். தற்போது ஆக்‌ஷன் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமியை பார்த்து அழகே என ஹிப் ஹாப் ஆதி இசையில் மீண்டும் அழகு சென்டிமென்ட் பாடல் இடம்பெற்றுள்ளது. இதில், ஆச்சர்யம் என்னவென்றால், எல்லா அழகு பாடலும் ஹிட் ஆகி வருகிறது.

அவங்க கோச்சிக்க மாட்டாங்களா

ஆக்‌ஷன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அழகே அழகே பாடலில் விஷாலுடன், ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். ராணுவத்தில் இருக்கும் விஷால், குடும்பத்துடன் ஐஸ்வர்யா லட்சுமியை ரொமான்ஸ் செய்வதாக இந்த அழகு பாடல் உருவாகியுள்ளது. இதனால், படத்தின் நாயகியான தமன்னா கோச்சிக்காமல் இருந்தால் சரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X