ஜிவி இசையில் அனிருத்.. ஓவர் பில்டப், ஆனா வொர்த் இல்ல.. செகண்ட் சிங்கிள் சுமார் தான்!

சென்னை: அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்திலிருந்து செகண்ட் சிங்கிள் பாடலின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு மாலை வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்திருந்த நிலையில், பாடலின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஆதிக் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் இசையில் உருவான இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரசன்னா, சுனில், பிரபு, அர்ஜூன் தாஸ், யோகி பாபு, டாம் சாக்கோ, அவினாஷ் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மைத்திரி மூவி மேக்க்கர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போது விடாமுயற்சி படமும் வெளியாக வாய்ப்பு இருந்ததால், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளிவைத்து. இதைத்தொடர்ந்து இப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தியேட்டரில் வெளியாக உள்ளது.

good bad ugly Ajith song

குட் பேட் அக்லி:கடந்த மாதம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம், அஜித் படம் போல இல்லை என ரசிகர்கள் புலம்பிய நிலையில், அனைவரின் எதிர்பார்ப்பும் இப்படத்தின் மீது உள்ளது. இப்படத்திலிருந்து வெளியான அறிவிப்புகள் அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன் மடங்கு அதிகரித்துள்ளது. படத்தின் தலைப்பு முதல் டீசர் வரை ரசிகர்களிடம் மிகப்பெரிய ஹைப்பை கொடுத்துள்ளன. அண்மையில் இப்படத்தின் முதல் பாடலான OG சம்பவம் பாடலை ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து பாடியிருந்தனர். இப்பாடல் வெளியாகி 12 நாட்கள் ஆன நிலையில் 22 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

good bad ugly Ajith song

இரண்டாவது சிங்கிள்: இந்த பாடல் இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், இப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் 5:50 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருந்தது. மேலும், ஒலிப்பெருக்கிகள் எல்லாம் இப்பாடலால் உடைய போகிறது என குறிப்பிட்டு இருந்தனர். மேலும்,இப்படத்தின் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ், மிகப்பிரபலங்களை எதிர்பார்க்கலாம் என பதிவிட்டு இருந்தார். இதையடுத்து,இரண்டாவது சிங்கிள் பாடலின் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில், ஜிவி பிரகாஷ் இசையில் 'மாமே சவுண்டு ஏத்து' என்ற பாடலை அனிருத் பாடி இருக்கிறார். இதன் ப்ரோமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள், ஜிவி ,அனிருத் காமிஷேன் பாட்டு சூப்பர் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சரியான நேரத்தில் இரண்டாவது சிங்கிள் பாடலுக்கான அறிவிப்பை வெளியிட்ட படக்குழு, இந்த பாடல் ஞாயிற்றுக் கிழமை வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது. அஜித்தின் ரசிகர்கள் முழுப்பாடலை கேட்க ஆவலாக உள்ளனர்.,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X