Ajith: ஆட்டம் போட வைக்கும் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. ஆடியோதான்பா வெளியாகியிருக்கு!

சென்னை: நடிகர் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் அடுத்த ஆண்டின் துவக்கத்திலேயே ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படம் அடுத்த மாதம் பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோஷன்களுக்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் அதிகமான சூட்டிங் அசர்பைஜானில் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் தாய்லாந்தில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த சூட்டிங்கில் அஜித்துடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை திரிஷா சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.

ajithkumar vidaamuyarchi movie first single

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்குமாரின் அடுத்தடுத்த படங்கள் கவனத்தை ஈர்த்துவரும் நிலையில் துணிவு படத்தை தொடர்ந்து கடந்த இரு ஆண்டுகளாக அவரது படங்கள் எதுவும் ரிலீசாகததால் ரசிகர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தில் இருந்தனர். இந்நினலையில் அவற்றையெல்லாம் ஈடு செய்யும் வகையில் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் 2025ம் ஆண்டின் துவக்கத்திலேயே ரிலீசாகவுள்ளன. வரும் பொங்கலையொட்டி விடாமுயற்சி படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோடை கொண்டாட்டமாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விடாமுயற்சி படம்: விடாமுயற்சி படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தாய்லாந்தில் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் பாடல் காட்சிகள் உள்ளிட்டவற்றுடன் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இதில் அஜித், திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். சூட்டிங் ஸ்பாட்டில் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை திரிஷாவும் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். இந்தப் புகைப்படங்களில் இவர்களின் அழகு அள்ளியது. ரோட் திரில்லர் படமாக விடாமுயற்சி உருவாகியுள்ள நிலையில், படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காததிருக்கின்றனர்.

விடாமுயற்சி பர்ஸ்ட் சிங்கிள்: விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு கடந்த மே மாதத்திலேயே வெளியான நிலையில், படத்தின் சூட்டிங்கில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது ஒருவழியாக இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவு செய்யப்பட்டு ரிலீசுக்கும் தயாராகியுள்ளது. முன்னதாக படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் இன்றைய தினம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. இன்று பகல் ஒரு மணியளவில் இந்த சிங்கிள் வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பு அறிவித்திருந்த நிலையில், தற்போது பாடலின் ஆடியோ மட்டுமே வெளியாகியுள்ளது. பாடலின் லிரிக் வீடியோ மாலை 5.05 மணியளவில் வெளியாகும் என்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனிருத் இசை: அனிருத் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் பிஜிஎம் மிகப்பெரிய அளவில் மாஸ் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அத்தாட்சியாக முன்னதாக வெளியான டீசர் மற்றும் தற்போது வெளியாகியுள்ள பாடல் ஆடியோ ஆகியவை மிகப்பெரிய அளவில் மாஸாக அமைந்துள்ளது. ஆடியோ பாடலே ஆட்டம் போட வைக்கும் வகையில் அமைந்துள்ளது. மாலை வெளியாகும் லிரிக் வீடியோவும் ரசிகர்களை குத்தாட்டம் போட வைக்கும் என்றுஎதிர்பார்க்கலாம். முன்னதாக அஜித் -அனிருத் கூட்டணி வெற்றிகரமாக அமைந்த நிலையில் இந்தப் படமும் அந்த வரிசையில் இடம்பெறும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

குத்தாட்டம் போட வைக்கும் பாடல்: அனிருத் மற்றும் ஆண்டனி தாசன் வாய்சில் இந்தப் பாடல் வெளியாகியுள்ளது. கணவன் -மனைவி இடையிலான உறவை மையப்படுத்தி இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் கணவன் -மனைவியாக அஜித் மற்றும் திரிஷா நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இந்தப் பாடல் இந்த ஆண்டின் சிறப்பான பாடலாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X