ஜெய் -சுசீந்திரன் கூட்டணியில் உருவாகும் சிவ சிவா... 2வது பாடல் வெளியீடு

சென்னை : நடிகர் ஜெய் -சுசீந்திரன் கூட்டணியில் உருவாகிவரும் படம் சிவ சிவா.

இந்தப் படத்தின்மூலம் நடிகர் ஜெய் முதல் முறையாக இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார்.

தற்போது இந்தப் படத்தின் 2வது பாடலை இசையமைப்பாளர் தமன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சிவ சிவா படம்

சிவ சிவா படம்

நடிகர் ஜெய், மீனாட்சி, காளி வெங்கட், பால சரவணன் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் சிவ சிவா. இந்தப் படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின்மூலம் நடிகர் ஜெய் முதல்முறையாக இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார்.

சுசீந்திரன் இயக்கம்

சுசீந்திரன் இயக்கம்

இந்தப் படத்தை இயக்கிவந்த சுசீந்திரன், இடையில் சிம்புவை வைத்து ஈஸ்வரன் படத்தை இயக்கினார். இந்நிலையில் மீண்டும் தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பில் பிசியாகியுள்ளார். முன்னதாக படத்தில் முதல் மெலடி பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது.

2வது பாடல் வெளியீடு

2வது பாடல் வெளியீடு


இந்நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது சிங்கிளை இசையமைப்பாளர் தமன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அம்மம்மா என்ற அந்தப் பாடல் லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ளது. பாடலை ஹரிச்சரண் மற்றும் அர்ச்சனா சபேஷ் பாடியுள்ளார். பாடலாசிரியர் யுகபாரதி வரிகளில் சிறப்பாக வந்துள்ளது பாடல்.

 வெற்றிக்கு போராடும் ஜெய்

வெற்றிக்கு போராடும் ஜெய்

டைரக்டர் சுசீந்திரன் தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்துவரும் நிலையில் சமீபத்தில் வெளியான சிம்புவின் ஈஸ்வரன் படமும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. இந்நிலையில் தற்போது ஜெய்யின் நடிப்பில் சிவ சிவா படம் உருவாகி வருகிறது. நீண்ட நாட்களாக வெற்றிக்காக போராடிவரும் ஜெய்க்கும் இந்தப் படம் சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரவேற்பை பெற்ற டீசர்

வரவேற்பை பெற்ற டீசர்

லென்டி ஸ்டூடியோ சார்பில் ஐஸ்வர்யா தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் முழுக்க முழுக்க கிராமத்து கெட்டப்பில் ஜெய் காணப்படுகிறார். கையில் அரிவாள், ரத்தத்துடன் அவர் எதிரிகளை எதிர்கொள்ளும் காட்சிகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

Recommended Video

அடுத்து Balaji Sakthivel sir படத்துல Lead டா நடிக்குறேன்| Actor Vijayan Sai Dinesh | Filmibeat Tamil
ஜெய் மகிழ்ச்சி

ஜெய் மகிழ்ச்சி

அடுத்தடுத்து டீசர், பாடல்கள் என படத்தின் பிரமோஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இசையமைப்பாளர் ஆனது குறித்து ஜெய் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

19 ஆண்டு கனவு

19 ஆண்டு கனவு

பகவதி படத்தின்மூலம் கோலிவுட்டில் அறிமுகமான ஜெய் முதலில் இசையமைப்பாள் ஆகும் கனவுடனே சினிமாவிற்கு வந்ததாகவும் ஆனால் நடிகராக மாறியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் ஆகும் தன்னுடைய 19 வருட கனவு தற்போது நனவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X