யூடியூப்பில் சாதனை படைத்த “குட்டி பட்டாஸ்“… மகிழ்ச்சியில் அஸ்வின் !
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வின் பெண்களின் கனவு நாயகனாக வலம் வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருந்தாலும் இந்த நிகழ்ச்சிதான் அவரை பிரபலமடையச் செய்தது.
அஸ்வினின் அமைதியான பேச்சு... அஸ்வின் ஸ்டைல் அனைத்து பெண்களுக்கு பிடித்துப் போக... பெண்களின் ஃபேரைட் ஹீரோவாகவே மாறிவிட்டார் அஸ்வின்.
இந்நிலையில், அஸ்வின் நடித்த குட்டி பட்டாஸ் பாடலை யூடியூப்பில் 125 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த பாடலை தினம் தினம் ஏராளமானோர் பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.

அஸ்வின்
அஸ்வின் முதன் முதலில் தமிழ் துறையில் தான் பணியாற்றினார்.இவரது முழு பெயர் அஸ்வின் குமார்.இவர் தமிழ் நடிகரான கே.ஏ.தங்கவேலு,காக்கா கராதாகிருஷ்ணன் ஆகியோரின் பேரன் ஆவார்.இவர் பல இன்னல்களுக்கு பிறகு முதன் முதலில் டிவி தொலைக்காட்சியில் தான் அறிமுகமானார்.பல தொடர்களில் முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார். அதில்,தாமரை,குலதெய்வம்,லட்சுமி கல்யாணம் ,நீலி, சுமங்கலி ஆகிய நாடகங்களில் முன்னணி கதாநாயகனாகவும் துணை வேடத்திலும் நடத்திருந்தார்.

குக்விக் கோமாளி
அதன்பின் சில நாட்கள் திரை உலகின் பக்கம் வராமல் யூடுப் மூலம் அதிக அளவு பிரபலமடைந்தார்.அதில் ஆல்பம் மூவி,ஆல்பம் பாட்டு என்று அதிக அளவு பிரபலமடிதுள்ளர்.தருபோது விஜய் டிவியில் அதிக பிரபலமடைந்த குக் வித் கோமாளி என்னும் ஷோ வில் கலந்துள்ளார்.அதில் பல கோமாளிகளுடன் சேர்ந்து காமெடியாக சமைக்கும் காட்சிகள் மக்கள் அனைவரையும் மிகவும் கவர்ந்தது.முக்கியமாக ஷிவாங்கி என்னும் கோமாளியுடன் கலந்து சமைக்கும் காட்சிகள் அதிக அளவு இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன் அஸ்வின் மற்றும் ஷிவாங்கி என்ற ஜோடிக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

என்ன சொல்லபோகிறாய்
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பெண்களின் கனவு கண்ணனாக மாறிய அஸ்வின் என்ன சொல்லப்போகிறாய் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதிலும் புகழும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அசத்தல் சாதனை
இந்நிலையில், அஸ்வின் நடித்த குட்டி பட்டாஸ் பாடல், ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.சந்தோஷ் தயாநிதி இசையில்,பிக்பாஸ் புகழ் சாண்டி மாஸ்டர் நடன அசைவுகள் அமைக்க வெங்கி இந்த பாடலை இயக்கி இருந்தார். இந்த பாடல் யூடியூப்பில் 100 மில்லியனை கடந்து அசத்தியிருந்த நிலையில், தற்போது இந்த பாடல் வீடியோ யூடியூப்பில் 125 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அசத்தல் சாதனையை படைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











