Dhanush: அக்கா பையனுக்காக தனுஷ் செய்த சம்பவம்.. 10 மில்லியன் பார்வைகளை நெருங்கிய காதல் ஃபெயில்!
சென்னை: நடிகர் தனுஷ் இயக்கத்தில் அடுத்தடுத்து படங்கள் உருவாகி வருகின்றன. ப பாண்டி படத்தை தொடர்ந்து நீண்ட காலங்களுக்கு பிறகு தனுஷின் ராயன் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
ஜிவி பிரகாஷ் இசையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக இட்லிகடை படத்தின் ஷூட்டிங்கையும் தனுஷ் நிறைவு செய்யவுள்ளார். அடுத்தடுத்து அவரது நடிப்பிலும் இயக்கத்திலும் படங்கள் வெளியாகி வருவது அவரது ரசிகர்களை கொண்டாட செய்து வருகின்றன.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து நடிப்பிலும் இயக்கத்திலும் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவை மட்டுமில்லாமல் பாடகராகவும் பாடல் ஆசிரியராகவும் இவர் அடுத்தடுத்து செயல்பட்டு வருகிறார். தமிழில் மட்டும் தன்னை சுருக்கிக் கொள்ளாமல் டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அடுத்தடுத்த தளங்களில் பயணித்து வரும் தனுஷ், சமீப காலமாக இயக்கத்தில் அதிகமான கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ப பாண்டி படத்தை தொடர்ந்து நீண்ட காலங்களுக்கு பிறகு தனுஷ் இயக்கத்தில் ராயன் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் இணைந்திருந்தனர்.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம்: ஏஆர் ரஹ்மான் இசையில் உருவான இந்த படம் மிகச்சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்றது. படம் 100 கோடி கிளப்பில் இணைந்த நிலையில் அடுத்தடுத்த அதே உற்சாகத்துடன் படங்களை இயக்க களமிறங்கியுள்ளார் தனுஷ். அடுத்ததாக தன்னுடைய இயக்கம், நடிப்பு, தயாரிப்பில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி முடித்துள்ளார் தனுஷ். இந்த படம் அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜிவி பிரகாஷ் இசையில் இந்த படத்தின் அடுத்தடுத்த இரு பாடல்கள் வெளியாகி மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன.
NEEK படத்தின் 2வது பாடல்: அந்த வகையில் கோல்டன் ஸ்பேரோ மற்றும் காதல் பெயில் என இரண்டு பாடல்களுமே மாஸ் ஹிட் ஆகியுள்ளன. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான காதல் பெயில் பாடல் 10 மில்லியன் வியூஸ்களை நெருங்கியுள்ளது. தனுஷ் பாடியுள்ள இந்தப் பாடல் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. தன்னுடைய அக்கா மகன் பவிஷை இந்தப் படத்தில் ஹீரோவாக்கி அழகு பார்த்துள்ளார் தனுஷ். இதில் பவிஷுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தையே அவர் இணைத்துள்ளார். அவர்களுடன் தனுஷும் நடிகர் சரத்குமாரும் படத்தில் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
10 M வியூஸ்: இந்தப் படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வைப்பை கொடுத்து வரும் சூழலில், படம் அவரது ராயன் படம் போல சீரியஸான கதைகளத்தில் இல்லாமல் ஜாலியான கொண்டாட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். காதலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் அடுத்த ஆண்டு காதலர் தினத்தையொட்டி ரிலீசாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகிவரும் இட்லிகடை படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாகவுள்ள நிலையில், இந்தப் படம் முன்னதாக ரிலீசாகும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











