Raayan movie: காட்டாறு தோக்காதுடா.. தனுஷின் ரகளையான ராயன் 3வது சிங்கிள் ரிலீஸ்!
சென்னை: நடிகர் தனுஷ் நீண்ட காலங்களுக்கு பிறகு இயக்குனர் அவதாரத்தை கையில் எடுத்துள்ள படம் ராயன். இந்த படம் கடந்த மாதத்திலேயே ரிலீசாகவிருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு இம்மாதம் 26ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராயன் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் இரண்டு பாடல்கள் முன்னதாக லிரிக் வீடியோவாக வெளியாகி மாஸ் காட்டியது. இந்நிலையில் தற்போது படத்தின் மூன்றாவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் நாளைய தினம் படத்தின் இசை வெளியீடு பிரமாண்டமாக நடக்க உள்ளது.

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் சர்வதேச அளவில் கவனம் பெற்று வரும் நடிகராக மாறியுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் மட்டுமில்லாமல் ஹாலிவுட்டிலும் நடித்துவரும் தனுஷ், அடுத்தடுத்து நிற்க கூட நேரமில்லாமல் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு இயக்கத்தை மேற்கொள்வதற்கு எங்கே தான் நேரம் கிடைத்தது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தனுஷ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ளது ராயன் படம். இந்த படம் கடந்த மாதத்திலேயே ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஜூலை 26ம் தேதி இந்த படத்தின் ரிலீஸ் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏஆர் ரஹ்மான் இசை: படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ள நிலையில் படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்ஜே சூர்யா, அபர்ணா முரளி, துஷாரா விஜயன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதைகளத்தில் வடசென்னையை மையமாகக் கொண்டு இந்த இந்த படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் தனுஷ் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன்களை அடுத்தடுத்து படக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். ஏஆர் ரஹ்மான் இசையில் இந்த படத்தின் அடுத்தடுத்த இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை சிறப்பாக கவர்ந்துள்ளன.
ரகளையான 3வது சிங்கிள்: மேலும் நாளைய தினம் படத்தின் இசை வெளியீடு பிரமாண்டமாக நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே, இன்றைய தினம் இந்த படத்தின் 3வது சிங்கிள் வெளியிடப்பட்டுள்ளது. அதிரடி சரவெடியாக அறிவு எழுத்து மற்றும் குரலில் இந்த படம் பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை கேட்ட ரசிகர்கள், படத்தில் தனுஷ் மிகப் பெரிய அளவில் சம்பவம் செய்துள்ளதாக பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இன்னும் இரு வாரங்களில் இந்த படத்தின் ரிலீஸ் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து படக்குழுவினர் ப்ரோமோஷன்களில் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த படங்கள்: தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்தின் சூட்டிங் இந்த மாதத்துடன் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்டவர்கள் தனுசுடன் இணைந்து நடித்துள்ளனர். முன்னதாக தனுஷ் மற்றும் நாகார்ஜுனாவின் கேரக்டர் வீடியோக்கள் வெளியான நிலையில், இன்றைய தினம் ராஷ்மிகா மந்தனாவின் மிரட்டலான கேரக்டர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் தனுஷ் -அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் கேப்டன் மில்லர் படம் வெளியான நிலையில் இன்னும் சில தினங்களில் ராயன் படம் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் குபேரா படமும் இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











