இசையமைப்பாளராக அறிமுகமாகும் நடிகர் ஜெய்... அதுவும் யாருடைய படத்தில் தெரியுமா!

சென்னை: சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர் நடிகர் ஜெய்.

அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக கொண்டிருந்த ஜெய் இப்பொழுது தானுண்டு தன் வேலையுண்டு என படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

கிட்டத்தட்ட 10 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்து வரும் ஜெய் முதல்முறையாக இசையமைப்பாளராக இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் புதிய திரைப்படத்தில் அறிமுகமாகிறார்.

சுப்ரமணியபுரம்

சுப்ரமணியபுரம்

வெங்கட்பிரபுவின் சென்னை-28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான ஜெய் அதற்கு முன்பாகவே விஜய்க்கு தம்பியாக பகவதி என்ற படத்தில் நடித்து இருப்பார். கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி வெளியான சென்னை-28 திரைப்படம் அந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு நடிகர் ஜெய் ஹீரோ அந்தஸ்தை பெற்றார். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிய இரண்டாவது படத்திலேயே பலரும் தயங்கக் கூடிய ராவான கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார். இப்பொழுது கோலிவுட்டில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவராக உள்ள சசிகுமார் இயக்கி நடித்திருந்த சுப்ரமணியபுரம் திரைப்படம் ஜெய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இன்றுவரை தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த படைப்புகளில் சுப்பிரமணியபுரம் தனி இடத்தை பெற்றுள்ளது.

பிளாக்பஸ்டர்

பிளாக்பஸ்டர்

தொடர்ந்து பல காதல் படங்களில் நடித்து காதல் மன்னனாக வலம் வந்த நடிகை ஜெய் இன்றுவரை வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியாகும் படங்களில் ஒரு காட்சியிலாவது வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அர்ஜுனன் காதலி, வாமணன்,அதே நேரம் அதே இடம், அவள் பெயர் தமிழரசி, கனிமொழி என தொடர்ந்து சுமாரான வெற்றிகளைப் பெற்றுவந்த ஜெய் எங்கேயும் எப்போதும் என்ற பிளாக்பஸ்டர் மூவியை கொடுத்து அனைவரது ஃபேவரைட் ஹீரோவாக மாறினார் . அறிமுக இயக்குனர் சரவணன் இயக்கத்தில் வெளியான எங்கேயும் எப்போதும் படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தயாரித்து இருக்க இதில் ஜெய்யின் கதாபாத்திரமும் நடிப்பும் அனைவரையும் கவர்ந்திருந்தது. இவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்திருப்பார்.

அடல்ட் காட்சிகள்

அடல்ட் காட்சிகள்

இந்த நிலையில் இயக்குனர் அட்லி அறிமுகமான ராஜா ராணி படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்து அதிலும் வெற்றி கண்ட ஜெய்க்கு அதன்பின் வெளியான திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இவரது 25வது திரைப்படத்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கி இருந்தார். முழுவதும் அடல்ட் காட்சிகள் நிறைய வெளியான கேப்மாரி சுமாரான வெற்றியைப் பெற்றுத் தந்தது. இதற்கிடையில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி டேமேஜ் ஆகி இப்பொழுது படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் அந்த வகையில் கைவசம் மட்டும் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் ஜெய் .

சிவசிவா

சிவசிவா

வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல ,பாண்டிய நாடு என சூப்பர் ஹிட் படங்களை இயக்கி வந்த சுசீந்திரன் இப்பொழுது முழுக்க முழுக்க கமர்ஷியல் படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் என்ற படத்தை சுசீந்திரன் இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. மேலும் இப்படம் நடிகர் சிம்புவுக்கு மிகப்பெரிய கம்பேக் ஆக அமைந்தது. இதையடுத்து மீண்டும் சிம்புவை வைத்து படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் சுசீந்திரன் கூறியிருந்தார். இந்த நிலையில் நடிகர் ஜெய் உடன் கூட்டணி அமைத்து அடுத்தடுத்து இரண்டு படங்களை ஒரே சமயத்தில் இயக்கிவருகிறார். இதில் ஒரு படத்திற்கு "சிவசிவா" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளராக அறிமுகம்

இசையமைப்பாளராக அறிமுகம்

ஆக்சன் கமர்ஷியல் கதை களத்தில் உருவாகிவரும் சிவசிவா படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் சமீபத்தில் இதன் மோஷன் போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பியது. அதில் ஜெய் மடித்துக் கட்டிய வேட்டியுடன் கையில் வீச்சரிவாள் வைத்துக்கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட மழையில் நனைந்தபடி கண்களில் வெறியுடன் நிற்க வேற லெவல் கூஸ்பம்ஸ் ஆனது. இதில் ஜெய்க்கு ஜோடியாக ஆகன்க்ஷா சிங் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் நடிக்கின்றனர். விரைவில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாக இருக்க சிவசிவா படத்திற்கு நடிகர் ஜெய் இசை அமைத்து இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். பிரபல இசையமைப்பாளர் தேவாவின் நெருங்கிய உறவுக்காரரான ஜெய்க்கு சிறு வயது முதலே இசையமைக்கும் ஆர்வம் இருந்துள்ளது.

Recommended Video

இந்த வருஷம் 8 படம் பண்றேன் | Actor Jeeva Ravi Chat Part-02 | Filmibeat Tamil
வெறித்தனமான தீம் மியூசிக்

வெறித்தனமான தீம் மியூசிக்

ஆனால் நடிக்கும் வாய்ப்பு முதலில் வர இப்பொழுது முழு நேர ஹீரோவாக ஆகியுள்ளார். இருப்பினும் இசை தாகம் இன்னும் அவருக்குள்ளே இருக்க இசையமைப்பாளராக ஆவதே என்னுடைய விருப்பம் என பல்வேறு பேட்டிகளில் கூறி வந்த ஜெய் இப்பொழுது தன்னுடைய திரைப் படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். சமீபத்தில் வெளியான சிவசிவா படத்தின் மோஷன் போஸ்டரில் வெறித்தனமான இவரது தீம் மியூசிக் பட்டையைக் கிளப்பிக் இருந்தது. சிவசிவா வெளியான பிறகு சினிமாவில் அனைவரும் மெச்சும் மிகச் சிறந்த இசையமைப்பாளராக ஜெய் வலம் வர உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X