Kamal with Shruti: உலகநாயகனுடன் ஸ்ருதிஹாசன் சுவாரஸ்ய உரையாடல்.. நாளை வெளியாகும் வீடியோ!

சென்னை: நடிகை ஸ்ருதிஹாசன் -இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து சமீபத்தில் இனிமேல் பாடல் வெளியானது.. இந்தப் பாடலுக்கான வரிகளை நடிகர் கமல்ஹாசனே எழுதிய நிலையில் அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமே தயாரித்திருந்தது. இந்தப் பாடலுக்கு தானே இசையமைத்து பாடியிருந்தார் ஸ்ருதிஹாசன். மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளியான இனிமேல் பாடல் வரவேற்பை பெற்றதுடன் விமர்சனங்களையும் பெற்றது.

இந்த பாடலில் ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜின் கெமிஸ்ட்ரியும் விமர்சனங்களை பெற்றது. இந்தப் பாடலுக்கான இசையை சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே தான் ஆங்கிலத்தில் உருவாக்கியதாகவும் இதை தமிழில் மாற்றும் எண்ணம் வந்தபோது தன்னுடைய அப்பாவையே பாடல் வரிகளை எழுத வைக்கும் முடிவைத்தான் எடுத்ததாகவும் ஸ்ருதிஹாசன் தன்னுடைய முந்தைய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

Actor Kamal haasan and his daughter shruti haasan s conversation video to be release tomorrow

இனிமேல் பாடல்: நடிகை ஸ்ருதிஹாசன் தன்னுடைய அப்பா உலகநாயகன் கமல்ஹாசனை போலவே சினிமாவில் பன்முக திறமையுடன் வலம் வந்து கொண்டிருப்பவர். நடிகையாக மட்டுமின்றி பாடல் ஆசிரியர், பாடகர், இசை அமைப்பாளர் என பன்முக திறமையுடன் அவர் கோலிவுட்டில் மட்டும் இல்லாமல் டோலிவுட், பாலிவுட் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தனியாக இசை ஆல்பங்களிலும் அவர் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து ஸ்ருதிஹாசன் நடித்திருந்த இனிமேல் பாடல் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தது.

பாடல் வரிகளை எழுதிய கமல்: இந்தப் பாடலை இதன் இசையமைப்பை சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே தான் உருவாக்கியதாகவும் ஆனால் தான் ஆங்கிலத்தில் இந்த பாடலை உருவாக்கியதாகவும் ஸ்ருதிஹாசன் தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். தன்னுடைய அப்பாவிடமே தமிழில் இதன் பாடல் வரிகளை எழுதித்தருமாறு கேட்டதாகவும் இதன் உணர்வுகளை கேட்ட பின்பு அவர் உடனடியாக வரிகளை எழுதி தந்ததாகவும், தொடர்ந்து மறுநாள் 10 விதமான ஆப்ஷன்களுடன் அவர் தன்னை சந்தித்ததாகவும் தான் அதைப்பார்த்து மிரண்டதுடன் அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து தேவையான வார்த்தைகளை எடுத்துக் கொண்டதாகவும் ஸ்ருதிஹாசன் தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

தயக்கம் காட்டிய லோகேஷ்: இந்தப் பாடலில் நடிக்க முதலில் லோகேஷ் கனகராஜ் மறுப்பு தெரிவித்ததாகவும் ஆனால் அவருக்கு நடிப்பதற்கான முகம் இருப்பதை தான் கண்டறிந்து அவரை நடிக்க வைத்ததாகவும் ஸ்ருதிஹாசன் மேலும் அந்தப் பேட்டியில் கூறியிருந்தார். நடிகராக லோகேஷ் தயங்கினாலும் கேமரா முன்பு தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஸ்ருதிஹாசன் இருவரும் இணைந்து சிறப்பான உரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இது குறித்த அறிவிப்பை பிரமோவுடன் இன்று மாலை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Actor Kamal haasan and his daughter shruti haasan s conversation video to be release tomorrow

கமல்ஹாசன் -ஸ்ருதிஹாசன் உரையாடல்: நாளை பகல் 11 மணியளவில் இந்த உரையாடலின் முழு வீடியோவும் வெளியாக உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அப்பாவும் மகளும் இணைந்து இனிமேல் பாடலை சிரத்தையுடன் பாடுகின்றனர். மேலும் தன்னுடைய அப்பாவின் மூலம் தனக்கு கிடைத்த வாழ்க்கை பாடங்கள் குறித்தும் ஸ்ருதிஹாசன் கூறுவதாகவும் இந்த பிரமோ வீடியோவில் காணப்படுகிறது. இதே போல வாழ்க்கையின் சந்தோஷம் குறித்து கமல்ஹாசன் பேசுவதாகவும் இதில் காணப்படுகிறது. இதன் முழு வீடியோவையும் நாளை பகல் 11 மணிக்கு ராஜ்கமல் இன்டர்நேஷனல் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெயிட உள்ளநிலையில், இந்த வீடியோவை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X