Dragon: பிரதீப்புடன் சூப்பர் குத்தாட்டம் போடும் பிரபல டைரக்டர்.. டிராகன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

சென்னை: நடிகர் மற்றும் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் லீட் கேரக்டடிரில் நடித்துள்ள டிராகன் படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் வேலைகளை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து துரிதப்படுத்தி வருகிறார். படம் காதலர் தின ரிலீசாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK படத்திலும் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள நிலையில், படம் கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றைய தினம் டிராகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ள இந்த பாடலில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து இயக்குநர் கௌதம் மேனனும் குத்தாட்டம் போட்டுள்ளார்.

pradeep ranganathan dragon movie ashwath marimuthu

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்: கோமாளி படம் மூலம் தன்னை இயக்குநராக கோலிவுட்டில் அறிமுகம் செய்து கொண்ட பிரதீப் ரங்கநாதன், தொடர்ந்து லவ் டுடே படம் மூலம் ரசிகர்களை வசிகரித்தார். இந்த படம் மிகப்பெரிய ஹிட்டடித்த நிலையில் இயக்குநராகவும் நடிகராகவும் இந்தப் படத்தில் தோன்றி மாஸ் காட்டினார். லவ் டுடே படம் கொடுத்த சிறப்பான வரவேற்பை தொடர்ந்து, மற்ற இயக்குநர்களின் இயக்கத்திலும் நடித்து வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK படத்திலும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்திலும் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன்.

பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்: டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதன்,, கௌதம் மேனன்,மிஷ்கின், கேஎஸ் ரவிக்குமார், விஜே சித்து உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. படம் காதலர் தினக் கொண்டாட்டமாக வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத் தயாரிப்பாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்றைய தினம் லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ளது.

பிரதீப் & கௌதம் மேனன் குத்தாட்டம்: இதில் ஐடி ப்ரொபஷனலாக தோற்றமளிக்கிறார் பிரதீப். ஊக்கம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ள இந்த பாடலில் அவரது உயரதிகாரியாக கௌதம் மேனன் காணப்படுகிறார். இருவரும் தோள் சேர்த்து நடக்கும் படியான காட்சிகள் காணப்படும் நிலையில் ஒரு கட்டத்தில் இருவரும் இணைந்து குத்தாட்டம் போடுவதாக இந்த பாடலில் காட்சிகள் அமைந்துள்ளன. பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம் பிரதீப் ரங்கநாதனுக்கு மற்றொரு லவ் டுடே படமாக அமையுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LIK படம்: இதனிடையே விக்னேஷ் சிவன் -பிரதீப் கூட்டணியில் உருவாகியுள்ள LIK படத்தின் சூட்டிங்கும் ஏறக்குறைய நிறைவடைந்து படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படம் கோடைக் கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம், சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நீண்ட காலத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இந்தப்படம் உருவாகியுள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் காணப்படுகிறது. படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை சிறப்பான வகையில் பூர்த்தி செய்து வசூல் ரீதியாகவும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X