Rajinikanth: வேட்டையன் படத்தை கொண்டாட மற்றொரு காரணம்.. மீண்டும் வைப் மோடில் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள வேட்டையன் படம் மிகப்பெரிய வரவேற்புடன் இம்மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான நிலையில் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்தப்படத்தை இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கியிருந்தார்.

வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்த நிலையில், படத்தின் பாடல்கள் குறிப்பாக மனசிலாயோ பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கொண்டாட செய்தது. இந்தப் பாடலில் நடிகர் ரஜினிகாந்துடன், மஞசு வாரியர், ரக்ஷன் உள்ளிட்டவர்கள் ஆட்டம் போட்டிருந்தனர். இந்தப் பாடல் லிரிக் வீடியோவாக வெளியான நிலையிலேயே மிகப்பெரிய கொண்டாட்டத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது,

rajinikanth vettaiyan movie anirudh

வேட்டையன் படம்: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களுடன் மட்டுமில்லாமல் வளர்ந்துவரும் இயக்குநர்களுடனும் இணைந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் நெல்சன் திலீப்குமாருடன் இணைந்து ஜெயிலர் என்ற வெற்றிப் படத்தை கொடுத்திருந்தார். இந்தப் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய வெற்றிப் படைப்பாக அமைந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் நடித்திருந்தார் ரஜினிகாந்த். இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றநிலையில், அடுத்ததாக டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்திருந்தார்.

சிறப்பான வசூல்: போலி என்கவுண்டருக்கு எதிரான இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா. பகத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். படம் கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான நிலையில், படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீசானது. ஆயினும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. ஆயினும் சிறப்பான வசூலை படம் பெற்றுக் கொடுத்துள்ளதாக தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு மிகச்சிறப்பான பிரமோஷன்களை முன்னதாக லைகா நிறுவனம் செய்திருந்தது.

rajinikanth vettaiyan movie anirudh

மனசிலாயோ பாடல்: படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்த நிலையில், படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் லிரிக் வீடியோவாக வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியான மனசிலாயோ பாடல் மிகப்பெரிய கொண்டாட்டத்தை ரசிகர்களிடையே கொடுத்தது. இந்தப் பாடலில் ரஜினிகாந்துடன் மஞ்சு வாரியர், ரக்ஷன் உள்ளிட்டவர்கள் இணைந்து ஆட்டம் போட்டிருந்தனர். இந்தப் பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஆட்டம் போட செய்திருந்தது. லிரிக் வீடியோவாக வெளியாகி அதிகமான வியூஸ்களை இந்தப் பாடல் யூடியூவில் பெற்றிருந்தது.

மனசிலாயோ வீடியோ பாடல்: இந்நிலையில் தற்போது படம் ரிலீசாகி இத்தனை நாட்களை கடந்து இந்தப்பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாகவே இந்தப் பாடலை கொண்டாடிய ரசிகர்கள், தற்போது வீடியோ பாடலாகவும் என்ஜாய் செய்து வருகின்றனர். இந்தப் பாடலை அனிருத், யுகேந்தரன் உள்ளிட்டவர்கள் பாடிய நிலையில் பாடல் மிகப்பெரியொண்டாட்டமாக அமைந்து வருகிறது. படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் வெளியான நிலையில், படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். விரைவில் படம் ஓடிடியிலும் வெளியாகி மாஸ் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X