ரெண்டு ரூபாய் வெட்டிங் கார்ட் கணக்கா இருக்கு.. கேம் சேஞ்சர் 3வது சிங்கிளை விமர்சிக்கும் ரசிகர்கள்!

ஐதராபாத்: நடிகர் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, அஞ்சலி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கேம் சேஞ்சர் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பொங்கல் ரிலீசாக 10ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படம் டிசம்பர் 20ம் தேதி ரிலீஸுக்கு திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் பண்டிகை கொண்டாட்டமாக படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டதால் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் ஊழலுக்கு எதிரான ஐஏஎஸ் அதிகாரியின் பயணத்தை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. தமன் இசையில் முன்னதாக படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியான நிலையில் இன்றைய தினம் மெலடி ஜானரில் 3வது பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

ram charan game changer movie shankar

நடிகர் ராம்சரண்: ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து நடிகர் ராம்சரணின் அடுத்த படமாக உருவாகியுள்ளது கேம் சேஞ்சர். ஊழலுக்கு எதிரான கதைகளத்தில் ஷங்கரின் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. படத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக நடிகர் ராம்சரண் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் ராம்சரண் நடித்துள்ள இந்த படத்தில் கியாரா அத்வானி மகன் கேரக்டருக்கு ஜோடியாகியுள்ளார். சர்வதேச அளவில் இந்தப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3வது பாடல் ரிலீஸ்: முன்னதாக இந்த படத்தை டிசம்பர் 20ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு அது குறித்து அறிவிப்பும் மேற்கொண்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. தெலுங்கிலும் சங்கராந்தி கொண்டாட்டமாக படம் ரிலீசாகவுள்ளது. படத்திற்கு தமன் இசையமைத்துள்ள நிலையில் அடுத்தடுத்து இரு பாடல்கள் முன்னதாக வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றன. இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் 3வது பாடலாக நாநா ஹைரானா பாடல் வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான 2 பாடல்களை காட்டிலும் இந்த பாடல் சிறப்பாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

விஷுவல் ட்ரீட் என ரசிகர்கள் கொண்டாட்டம்: பாடலுக்கு ராமஜோகய்யா சாஸ்திரி லிரிக்ஸ் எழுதியுள்ள நிலையில் ஸ்ரேயா கோஷல் மற்றும் கார்த்திக் இணைந்து இந்த ரொமான்டிக் பாடலை பாடியுள்ளனர். தற்போது லிரிக்ஸ் வீடியோவாக இந்த பாடல் வெளியாகியுள்ள நிலையில் ராம்சரண் மற்றும் கியாரா அத்வானியின் காதல் கனவை வெளிப்படுத்தும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது குறித்து ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்து வருகின்றனர். பாடல் விஷுவல் ட்ரீட்டாக உள்ளதாகவும் ஷங்கரின் ட்ரேட்மார்க்காக பாடல் அமைந்துள்ளதாகவும் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். பாடலில் ராம்சரணை காட்டிலும் கியாராவின் நடனம் சிறப்பான கவனத்தை பெற்றுள்ளது.

மோசமான விஷுவல்ஸ் என கமெண்ட்: ஆயினும் ஒரு சாரார் இந்த பாடலில் மேக்கப் மற்றும் கெட்டப் குறித்து கலவையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். பாடலில் கியாரா அத்வானியின் மேக்கப் மற்றும் கெட்டப், முன்னதாக ஓம் சாந்தி ஓம் படத்தில் தீபிகா படுகோனின் அப்சரா கெட்டப்பை ஒத்திருப்பதாக கமெண்ட் செய்துள்ளனர். ஒரு சிலர் படத்தின் விசுவல் எபெக்ட்ஸ் மிகவும் மோசமாக அமைந்துள்ளதாகவும் இரண்டு ரூபாய் திருமண அழைப்பிதழில் காணப்படும் விஷயங்களை ஒத்திருப்பதாகவும் கமெண்ட் செய்துள்ளனர். மொத்தத்தில் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்களை இந்தப்பாடல் அடுத்தடுத்த பெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X