Game changer: மாய உலகிற்கு அழைத்து சென்ற ஷங்கர் -தமன் கூட்டணி.. கேம் சேஞ்சர் 3வது பாடல் ரிலீஸ்!
ஐதராபாத்: நடிகர் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா, அஞ்சலி, சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கேம் சேஞ்சர் படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமன் இசையில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியான நிலையில் தற்போது 3வது சிங்கிள் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் 20ம் தேதி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது பொங்கல் ரிலீசாக அடுத்த ஆண்டு ஜனவரி 10ம் தேதி படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேம் சேஞ்சர் படம்: இந்தியன் 2 படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரிலீசாகவுள்ளது கேம் சேஞ்சர் படம். தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் ராம்சரண் ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு இந்தப் படத்தில் நடித்து முடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கியரா அத்வானி நடித்துள்ளார். மேலும் எஸ்ஜே சூர்யா, அஞ்சலி, சமுத்திரக்கனி உள்ளிட்டவர்களும் லீட கேரக்டர்களில் நடித்துள்ள கேம் சேஞ்சர் படம் முன்னதாக டிசம்பர் 20ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படம் அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 10ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது பாடல் ரிலீஸ்: படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக இந்தப்படத்தின் அடுத்தடுத்த இரு பாடல்கள் வெளியான நிலையில் தற்போது இந்தப்படத்தின் மூன்றாவது பாடல் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் மிகச்சிறப்பான வகையில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மெலடி பாடல் மிகச்சிறப்பான வகையில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. பாடலில் ராம்சரண் மற்றும் கியாரா அத்வானியை வைத்து புத்தம் புதிய உலகத்தில் ரசிகர்களை உலவ விட்டுள்ளார் ஷங்கர்.
ரசிகர்களை கவர்ந்த பாடல்: ஷங்கர் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. அதேபோல அழகியலில் அவரை மிஞ்சுவதற்கும் ஆட்கள் குறைவுதான். இந்நிலையில் அதை மீண்டும் இந்த பாடல் மூலம் நிரூபித்துள்ளார். பாடலில் ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஜோடி மிகச் சிறப்பான கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தியுள்ளது. இவர்களின் ஜோடி இந்த படத்தில் மிகச் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை நிரூபிக்கும் வகையில் தற்போது இந்த பாடல் அமைந்துள்ளது. ஸ்ரேயா கோஷல் மற்றும் கார்த்திக் பாடியுள்ள இந்த பாடல் தமன் கேரியர் பெஸ்டாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டுகளை பகிர்ந்து வருகின்றனர். மேலும் இந்த ஆண்டின் சிறப்பான பாடலாகவும் இந்தப் பாடல் மாஸ் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷங்கருக்கு கைக்கொடுக்குமா?: கேம் சேஞ்சர் படத்தில் அப்பா மற்றும் மகன் என இரு வேடங்களில் ராம்சரண் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிராக செயலாற்றும் ஐஏஎஸ் அதிகாரியாக இந்தப் படத்தில் அவரது கேரக்டர் அமைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான இந்தியன் 2 படம் அவருக்கு சொதப்பலாக அமைந்த நிலையில், கேம் சேஞ்சர் படத்தை அவர் அதிகமாக எதிர்பார்த்துள்ளார். இந்தப் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











