நான் ட்ரெயின் ஏத்த வந்தவன்.. ரயில்ல ஏத்திவிட்டுட்டாங்க.. நந்தன் இசைவெளியீட்டில் சசிகுமார் சுவாரஸ்யம்!

சென்னை: நடிகர் சசிக்குமார், பிக்பாஸ் புகழ் ஸ்ருதி பெரியசாமி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நந்தன் படம் வரும் செப்டம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படம் இயக்குநர் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியுள்ளது.

இரா என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஜிப்ரான் இந்தப் படத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீடு இன்றைய தினம் சிறப்பாக நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சீமான் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு நந்தனின் வாழ்க்கை சம்பவங்கள் குறித்தும் நந்தன் படம் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

sasikumar nandhan movie audio launch

நடிகர் சசிக்குமார்: நடிகர் சசிக்குமார், பிக்பாஸ் புகழ் ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் நந்தன். இந்தப் படத்தை சரவணன் இயக்கியுள்ள நிலையில் இரா என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ள நிலையில் இன்றைய தினம் படத்தின் இசை வெளியீடு நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் அமீர், சசிக்குமார், சமுத்திரக்கனி, ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு படம் தங்களுக்குள் ஏற்படுத்திய பாதிப்பை பகிர்ந்துள்ளனர்.

இசை வெளியீட்டில் சீமான் பாராட்டு: இந்தப் படம் குறித்து பேசிய சீமான், இந்தப் படத்தில் நடிகர் சசிக்குமார் என்ற நடிகர் ரசிகர்களுக்கு தெரியமாட்டார் என்றும் அந்த கேரக்டராகவே மாறி சசிக்குமார் நடித்துள்ளதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார். கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் முன்னதாக சூரியை இயக்குநர் தேர்ந்தெடுத்திருந்த நிலையில் அவர் விடுதலை படத்தில் பிசியானதால் அந்த கேரக்டரில் சசிக்குமார் இணைந்துள்ளார். முன்னதாக இந்தப் படத்தில் சமுத்திரக்கனியின் கேரக்டருக்காகவே தான் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் ஆனால் தொடர்ந்து கதையின் நாயகனாக தான் தேர்வானதாகவும் சசிக்குமார் தெரிவித்துள்ளார்.

சசிக்குமாரை துவம்சம் செய்த இயக்குநர்: முன்னதாக இந்தப் படத்தில் சசிக்குமார் கேரக்டர் குறித்து இசை வெளியீட்டில் பேசியுள்ள இயக்குநர் சரவணன், தான் இந்தப் படத்திற்காக சசிக்குமாரை துவம்சம் செய்ததாக வருத்தம் தெரிவித்துள்ளார். அவரை பாராட்டவில்லை என்றாலும்கூட பரவாயில்லை, சூட்டிங்கின்போது அவரிடம் தொடர்ந்து 20 நாட்கள் கூட பேசாமல் இருந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு இந்தப் படத்தில் தான் ஏன்டா ஜாயன் ஆனோம் என்று சசிக்குமாரை தான் நோக வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரயில் ஏற்ற சென்றவன்: இந்நிலையில் இசை வெளியீட்டில் பேசியள்ள சசிக்குமார். தன்னுடைய படத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு டயலாக்கான உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு என்ற டயலாக் இயக்குநர் சரவணனுக்குத்தான் பொருந்தும் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் சரவணனின் மனைவி பள்ளி ஆசிரியையாக இருந்தபோதிலும் இந்தப் படத்தின் சூட்டிங்கின்போது அவர் பாத்திரம் கழுவியதை எல்லாம் தான் பார்த்ததாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். தான் இந்தப் படத்தில் ட்ரெயின் ஏற்ற சென்றவன் போலத்தான் 4 நாட்கள் சூட்டிங்கிற்காக கமிட் செய்திருந்த நிலையில், வழியனுப்ப வந்த தன்னையும் இயக்குநர் ட்ரெயினில் ஏற்றி விட்டதாகவும் அதன் விளைவுதான் இந்த கேரக்டர் என்றும் அவர் கூறியுள்ளார்.

இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டேன்: இந்தப் படத்தை தான் தயாரிக்க நினைத்ததாகவும் ஆனால அதற்கான வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லை என்றும் சசிக்குமார் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் தான் இஷ்டப்பட்டுதான் கஷ்டப்பட்டேன். இந்தப் படத்தில் சரவணனின் எழுத்து மிகப்பெரிய பாராட்டுக்களை பெறும் என்றும்அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X