Suriya: திஷா பதானியுடன் இணைந்து கோவா கடற்கரையை சூடாக்கிய சூர்யா.. கங்குவா 2வது சிங்கிள்!
சென்னை: நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நடராஜ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள கங்குவா படம் அடுத்த மாதம் 14ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் 10ற்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சிவா டைரக்ஷனில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் கேரியரில் அதிகமான பட்ஜெட்டில் மிகுந்த பிரம்மாண்டமாக கங்குவா படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரித்துள்ளார். படத்தின் ரிலீஸுக்கு இன்னும் ஒரு மாத காலம் கூட இல்லாத நிலையில் அடுத்தடுத்து சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் படத்தின் ப்ரோமோஷன்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் அடுத்த படமாக உருவாகியுள்ள கங்குவா படத்தை மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான பொருட்செலவில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தை இயக்குனர் சிவா இயக்கி முடித்துள்ளார். கங்குவா படம் இந்த மாதத்திலேயே கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவிருந்த நிலையில் ரஜினிகாந்தின் வேட்டையன் பட ரிலீசையடுத்து கங்குவா படத்தின் ரிலீஸ் நவம்பர் 14ம் தேதிக்கு தள்ளிப் போய் உள்ளது. இந்த படம் சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீசாக உள்ள நிலையில் அனைத்து மொழிகளிலும் ஏஐ தொழில்நுட்பத்தை கொண்டு நடிகர் சூர்யாவின் வாய்ஸை பயன்படுத்த உள்ளதாக முன்னதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
கங்குவா படம்: கங்குவா படத்தின் ரிலீஸுக்கு இன்னும் ஒரு மாத காலம்கூட இல்லாத நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே படத்தின் ப்ரோமோஷன்கள் துவங்கப்பட்டு அடுத்தடுத்து நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் இந்த படத்தின் ப்ரோமோஷன்களில் நடிகர் சூர்யா பங்கேற்கவில்லை. மாறாக படத்தின் இயக்குனர் சிவா மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோர் பங்கேற்று பல சுவாரஸ்யங்களை பகிர்ந்தனர். இதனிடையே அடுத்தடுத்து மும்பை மற்றும் டெல்லியில் நடத்தப்பட்ட கங்குவா படத்தின் ப்ரோமோஷன்களில் நடிகர் சூர்யா பங்கேற்று ரசிகர்களை சந்தித்தார்.
அடுத்தடுத்த பிரமோஷன்கள்: வட இந்தியாவில் சூர்யாவிற்கு அதிகமான ரசிகர்கள் காணப்பட்டதை அவரை காண கூடிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்து கணிக்க முடிந்தது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாகியுள்ளார் திஷா பதானி. வில்லனாகியுள்ளார் பாபி தியோல். முன்னதாக சூர்யா மற்றும் பாபி தியோல் கேரக்டர்களின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை மிரட்டியது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியான நிலையில் தற்போது படத்தின் 2வது சிங்கிள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள சூர்யாவின் கேரக்டர் படத்தில் இரண்டு மணி நேரங்கள் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கங்குவா பட இரண்டாவது சிங்கிள்: இதே போல நடப்பு காலத்திய இளைஞராக சூர்யா படத்தில் மற்றொரு கெட்டப்பில் நடித்துள்ளார். அதில் அவர் நடித்துள்ள காட்சிகள் படத்தில் அரை மணி நேரம் மட்டுமே வரும் என்றும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள படத்தின் 2வது சிங்கிளில் கோவா கடற்கரையில் நடிகர் சூர்யாவும் திஷா பதானியும் ஆட்டம் போட்டதை பார்க்க முடிகிறது. தேவிஸ்ரீ பிரசாத் இசையில் இந்த பாடல் மிகப்பெரிய வைபை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. அடுத்தடுத்து இந்த பாடல் மிகப்பெரிய வியூஸ்களை யூடியூபில் பெரும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











