'இளமை எனும் பூங்காற்று'.. இளையராஜா மேஜிக் சாங்.. டிரை பண்ணிய விவேக்!
சென்னை: நடிகர் விவேக் லாக்டவுன் நேரத்தை தனக்கு பிடித்த படி இசை கருவிகளை வாசித்து செலவிட்டு வருகிறார். அதே சமயங்களில் தான் இசைக்கும் சில இசையை வீடியோ பதிவாக பகிர்ந்தும் வருகிறார்.
Recommended Video
நடிகர் விவேக் ஒரு பியானோ விரும்பி எப்போதும், இளையராஜா பாடல்களை பியோனோவில் வாசித்து பலமுறை மெட்டமைத்து இருக்கிறார். சமீபகாலமாக இசை கருவிகளை வாசிக்க கற்று வரும் விவேக் தனது ரசிகர்களுக்காக சில நேரங்களில் தான் வாசித்த இசையை பதிவேற்றுகிறார்.

இதே போல் சில நாட்களுக்கு முன்னர் விவேக் மெட்டமைத்த சைக்கோ படத்தின் ' உன்ன நினைச்சு' பாடலும் பெரிய அளவில் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது. இதுவும் இளையராஜாவின் இசையின் வெற்றிபாடல் தான் .
இதே போல தற்போதும் இளையராஜா இசை அமைத்த பகலில் ஒரு இரவு படத்தில் வரும் 'இளமை எனும் பூங்காற்று' பாடலை மிக அழகாக தானே யார் உதவியும் இன்றி மெட்டமைத்து உள்ளார்.
இளையராஜாவின் இசைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரின் இசை தான் இந்த நூற்றாண்டின் மிக முக்கிய நல்ல விஷயம் என்று கூட சொல்லலாம். இளையராஜா என்ற கலைஞனுக்கும் இருக்கும் கோடி கணக்கான ரசிகர்களில் விவேக்கும் ஒருவர் .
தற்போது கூட விவேக் இளையராஜா பற்றி சில விஷயங்களை கூறியுள்ளார். இதில் கொட்டப்பட்டு கொட்டப்பட்டு புழு வண்ணத்துப் பூச்சி ஆதல் போல இனிய இசை கேட்டுக் கேட்டே , ரசிகன் கலைஞன் ஆகலாம் போல இதுதான் இளையராஜா மேஜிக் என்று இந்த இசையமைத்த காணொளியின் மேல் கூறியுள்ளார் .

இளையராஜா ரசிகர்கள் இணையத்தில் இந்த பதிவுக்காக விவேக்கிற்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர். மேலும் மொத்தமாக புகழ மட்டும் செய்யாமல் விவேக் அமைத்த மெட்டு எந்தந்த இடத்தில் எப்படி எப்படி இருக்கிறது என்றும் கூறியிருப்பது விவேக்கையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பல ரசிகர்கள் இதே போல் தொடர்ந்து பல காணொளிகளை பதிவேற்றும்படி விவேக்கிடம் கேட்டுகொண்டுள்ளனர். மேலும் விவேக்கிடம் நன்றாக இசை அமைக்கிறீர்கள் பேசாமல் நீங்களும் ஒரு இசையமைப்பாளராகஆகிவிடலாம் என்றும் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











