நடிகை அமலா நடித்துள்ள "அம்மா சாங்" 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது!

சென்னை : ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தற்போது கணம் என்ற திரைப்படம் தயாராகி வருகிறது

பிரபல தெலுங்கு நடிகர் சர்வானந்த் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரிது வர்மா நடித்து வருகிறார்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை அமலா இந்த படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க இப்படத்தில் இடம் பெற்றுள்ள அம்மா சாங் இப்பொழுது ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

இரு மொழிகளிலும்

இரு மொழிகளிலும்

தமிழ் சினிமாவில் மிக குறைந்த பட்ஜெட்டில் தரமான படங்களை தயாரித்து ரசிகர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். முதன்முறையாக அதிக பட்ஜெட்டில் தயாரித்த திரைப்படம் சுல்தான் நடிகர் கார்த்தியின் நடிப்பில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக தமிழில் அறிமுகமான இந்த திரைப்படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானது கமர்சியல் ரீதியாக வெற்றி பெற்று வசூலை குவித்தது இந்த நிலையில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அடுத்ததாக நேரடி தெலுங்கு திரைப்படம் ஒன்றை தயாரித்து வருகிறது.

ஓகே ஓக ஜீவிதம்

ஓகே ஓக ஜீவிதம்

அதன்படி அறிமுக இயக்குனர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் நடிகர் சர்வானந்த் நடிப்பில் தெலுங்கில் ஓகே ஓக ஜீவிதம் என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த படம் தமிழில் கணம் என்ற பெயரில் உருவாகி வருகிறது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்த படம் வெளியாகிறது

அமலா ரீ என்ட்ரி

அமலா ரீ என்ட்ரி

தெலுங்கில் மிக பிரபலமான நடிகராக உள்ள சர்வானந்த் தமிழிலும் சில படங்களில் நடித்து இங்கும் ரசிகர்களுக்கு பரிச்சயமாகி உள்ளார். ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை கதை மற்றும் எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட சில படங்களில் சர்வானந்த் தமிழிலும் நேரடியாக நடித்துள்ளார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகி வரும் கணம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக ரிது வர்மா நடித்து வருகிறார் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை வென்ற நடிகை ரிது வர்மா இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது

அம்மா சாங்

அம்மா சாங்

இசை கலந்த திரில்லர் கதை களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் 90களின் கனவுக்கன்னி நடிகை அமலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதாவது சர்வானந்துக்கு அம்மாவாக இப்படத்தில் தோன்றுகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அமலா இந்த படத்தில் நடித்துள்ளது ரசிகர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இப்படத்திற்கு ஜாகேஷ் பிஜாய் இசையமைத்து இருக்க கணம் படத்தில் இருந்து முதல் சிங்கிள் அம்மா சாங் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்பாடல் வெளியானது. சித்ஸ்ரீராம் குரலில் உமா தேவியின் வழிகளில் வெளியான அம்மா சாங் இப்பொழுது 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இணையதளத்தில் வைரலாகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X