கோலாகலமாக நடந்த கிருஷ்ணதாஸ் கீர்த்தனை.. இரண்டாவது முறையாக பங்கேற்ற அனுஷ்கா ஷர்மா & விராட் கோலி!

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா இருவரும் கடந்த 2017ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோராக உள்ளனர். தங்களது கேரியரை நோக்கிய பயணத்தில் இவர்களை சிறப்பாக பார்க்க முடிகிறது. இருவரின் ரொமான்ஸ் பக்கங்களும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.

இந்நிலையில் கர்வா சௌத்தை முன்னிட்டு மும்பையில் நடைபெற்ற கிருஷ்ணதாஸ் கீர்த்தனைகளில் இவர்கள் இருவரும் பங்கேற்று தங்களை மறந்து உற்சாகத்துடன் மனமுருகி பிரார்த்தனை செய்தனர். இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன.

anushka sharma virat kohli krishna das

விராட் கோலி -அனுஷ்கா சர்மா ஜோடி: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா இருவரும் கடந்த 2017ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ளனர். முன்னதாக இந்த ஜோடி பல ஆண்டுகள் காதலித்து வந்தனர். திருமணம், குழந்தைகள் என்று ஆன நிலையிலும் தங்களது கேரியரை நோக்கிய பயணத்தை விடாமல் இருவரும் தொடர்ந்து வரும் நிலையில் சமூக வலைதளங்களிலும் இவர்களை மிகவும் ஆக்டிவ்வாக பார்க்க முடிகிறது. தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் ரிலீஸ் குறித்த விபரங்களையும் போட்டோ ஷூட் புகைப்படங்களையும் தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார் அனுஷ்கா ஷர்மா.

ஆன்மிக நம்பிக்கை: தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் மூலமும் அனுஷ்கா சர்மா ரசிக்களை கவர்ந்து வருகிறார். இதே போல விராட் கோலியும் ஏராளமான ரசிகர்களுக்கு சர்வதேச அளவில் சொந்தக்காரராக உள்ளார். இவர்கள் இருவரும் தனித்தனியாகவோ, இணைந்தும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும் அடுத்தடுத்த வீடியோக்கள் தொடர்ந்து வைரல் ஆகி வருகின்றன. சமீபத்தில் கூட விராட் கோலி மற்றும் அனுஷ்கா இருவரும் இணைந்து விளையாடிய ஸ்ட்ரீட் கிரிக்கெட் மற்றும் அதன் வீடியோ மிகப் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இவர்கள் இருவரும் ஆன்மீகத்திலும் மிகவும் நம்பிக்கை உடையவர்களாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

கிருஷ்ண தாஸ் கீர்த்தனைகள்: இந்நிலையில் தற்போது மும்பையில் நெஸ்கோவில் நடைபெற்ற கிருஷ்ண தாசின் கீர்த்தனைகளில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா இருவரும் ஜோடியாக கலந்துக் கொண்டனர். இவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது மிகப் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. முன்னதாக கிருஷ்ணதாஸின் கீர்த்தனைகள் கடந்த ஜூன் மாதத்தில் லண்டனில் நடைபெற்ற நிலையில் அந்த நிகழ்ச்சியிலும் இவர்கள் இருவரும் பங்கேற்றனர். இந்நிலையில் தற்போது மும்பையில் கர்வா சௌத்தையொட்டி கடந்த 20ம் தேதி நடைபெற்ற கிருஷ்ணதாஸ் கீர்த்தனையிலும் இவர்கள் இரண்டாவது முறையாக கலந்துக் கொண்டனர்.

அனுஷ்கா -விராட் உற்சாகம்: இந்த நிகழ்ச்சியில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் மிகவும் இயல்பான உடையில் பங்கேற்றதுடன் உற்சாகத்தில் கைதட்டி ஆரவாரம் செய்து நிகழ்ச்சியை ரசித்ததையும் பார்க்க முடிந்தது. இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா கைத்தட்டி ஆர்ப்பரிக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர். அவர்கள் இந்த கீர்த்தனைகளை கேட்டு கடவுளின் ஆசிர்வாதத்தை பெற்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாடகர் கிருஷ்ண தாஸ்: அமெரிக்க பாடகரான ஜெஃப்ரி காகவல், கிருஷ்ண தாஸ் என்ற பெயரில் கீர்த்தன் என்ற இந்து பக்தி இசை நிகழ்ச்சிகளின்மூலம் மிகவும் பிரபலமானவர். அதிகமான இசை ஆல்பங்களை இவர் வெளியிட்டுள்ள நிலையில் கடந்த 2013ம் ஆண்டில் கிராமி விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டவர். கடந்த 1970களில் இந்தியாவிற்கு வந்த இவர், நீம் கரோலி பாபாவின் பக்தராக மாறினார். இதையடுத்தே தன்னுடைய குருவால் வழங்கப்பட்ட கிருஷ்ண தாஸ் என்ற பெயரின்மூலம் தன்னுடைய இசை நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X