Don't Miss!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- News பிரமாண பத்திரம் தாமதாக பதிவேற்றம்? தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்திவைப்பு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே.. அதிரடியாக ரூட்டை மாற்றும் இனியா..ஒர்க் அவுட் ஆகுமா?
தயாரிப்பாளர் ஆக முடிவு செய்துள்ளார் நடிகை இனியா.
சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம் என படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை இனியா, விரைவில் தயாரிப்பாளர் ஆக திட்டமிட்டிருக்கிறார்.
தமிழில் தேசிய விருது பெற்ற 'வாகை சூடவா' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை இனியா. தற்போது தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
தமிழில் 'காபி', மலையாளத்தில் மம்முட்டியுடன் வரலாற்று படமான 'மாமாங்கம்', பிரித்விராஜின் சகோதரர் இந்திரஜித்துடன் 'தாக்கோல்' மற்றும் கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் 'துரோணா' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் இனியா. இந்த படங்கள் அடுத்தடுத்து விரைவில் வெளியாக இருக்கின்றன.
இசை ஆல்பம்:
நடிப்பு ஒருபக்கம் இவரை மொழி பாகுபாடில்லாமல் துரத்திக் கொண்டிருக்க இனியாவோ, தனக்கு ஆத்மார்த்த திருப்தி தரும் இசையையும் நடனத்தையும் துரத்திக் கொண்டு இருக்கிறார். இதனாலேயே நடிகைகளில் எவரும் இதுவரை செய்திராத ஒரு விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார் இனியா. 'மியா' என்கிற வீடியோ இசை ஆல்பத்தை 'அமையா என்டர்டெய்ன்மென்ட்' நிறுவனத்தின் மூலம் தானே சொந்தமாக தயாரித்துள்ளார்.
கதைக்களம் இது தான்:
சர்வதேச நடனப்போட்டியில் கலந்து கொள்வதற்கு திறமை இருந்தும் தயங்கி நிற்கும் ஒரு பெண்ணிற்கு, எதிர்பாராமல் ஒரு இளைஞன் நடன குருவாக வந்து முறையாக நடனத்தைக் கற்றுக் கொடுத்து அவரை வெற்றிபெற செய்கிறான். இதுதான் இந்த வீடியோ ஆல்பத்தின் கான்செப்ட். நடனம் கற்றுக் கொள்ளும் மியா என்கிற பெண்ணாக இனியா நடித்துள்ளார். இந்த இசை ஆல்பத்தை பிரபல இசை வெளியீட்டு நிறுவனமான திவோ மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் யு1 ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளார் இனியா.
நம்பிக்கை:
இதுபற்றி இனியா கூறும்போது, "நான் ஒரு டான்சர் என்றாலும் இதுவரை நிறைய மேடைகளில் தான் ஆடியிருக்கிறேன்.. ஆனால் முதன்முறையாக பாட்டையும் நடனத்தையும் ஒன்றிணைத்து அதை மியூசிக் வீடியோவாக வெளியிட்டுள்ளேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ஆல்பத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய ‘டீம் மியா'வுக்கு மிகப்பெரிய வளர்ச்சி இருக்கும் என்றும் உறுதியாக கூறுகிறேன்.
தயாரிப்பாளர்:
மியா டீமில் பணியாற்றிய தொழில்நுட்ப குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். 2018 ஆம் வருடம் விருதுகள் பல குவிந்து எனக்கு மகிழ்ச்சிகரமான ஒரு ஆண்டாக அமைந்தது. அதேபோல் 2019ஆம் வருடமும் மிக சிறந்ததாக இருக்கும் என நம்புகிறேன். அதுமட்டுமல்ல, விரைவிலேயே தனது நிறுவனம் மூலம் திரைப்படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.