பாட்டு ஆட்டமென மேடையை தெறிக்கவிட்ட அதிதி ஷங்கர்..மிரண்டு பார்த்த ரசிகர்கள்!
சென்னை : முத்தையா இயக்கத்தில் உருவாகி உள்ள விருமன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ள அதிதி ஷங்கர், யுவனுடன் சேர்ந்து பாட்டுப்பாடி ஆட்டம்பாடி அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் 'கஞ்சா பூவு கண்ணால' பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

விருமன்
கொம்பன், மருது, புலிக்குத்தி பாண்டி, தேவராட்டம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் முத்தையா. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் விருமன். கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ், சரண்யா பொண்வண்ணன், மைனா நந்தினி, வடிவுக்கரசி,சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கிராமத்து கதை
கிராமத்து கதை அம்சம் கொண்ட இப்படத்தில் குடும்பம் மற்றும் உறவுகளின் முக்கியத்துவம் பற்றி அழகாக கூறப்பட்டுள்ளது. இத்திரைப்படம் தென்தமிழகத்தைச் சுற்றி படமாக்கப்பட்டுள்ளது. அதிதி ஷங்கர் இந்த திரைப்படத்தில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் தைரியம் மிகுந்த பாசக்கார பெண்ணாக நடித்துள்ளார். விருமன் படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

அதிதி ஷங்கர்
விருமன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, மதுரையின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள ராஜா முத்தையா மன்றத்தின் இந்த இசை வெளியீட்டு விழா மிகப்பிரமாண்ட செட்டுகள் போடப்பட்டு நடந்து வருகிறது. இந்த விழாவில் பேசிய, அதிதி ஷங்கர், இந்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த சூர்யா சாருக்கு நன்றி. இந்த படத்தில் நல்ல வாய்ப்பு கிடைத்தது. நான் நடிப்பதில் அப்பாவின் தலையீடு எப்போதும் இருந்ததில்லை. இனி அடுத்தடுத்து படங்களில் நடிக்கவுள்ளேன். கிராமத்து பெண்கள் தான் அழகு. கிராமத்து பெண்ணாக நடித்ததில் மகிழ்ச்சி என்றார்.
Recommended Video

பாட்டுப்பாடி ஆட்டம்போட்டார்
இதையடுத்து, யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து மதுர வீரன் பாடலை பாடி ஆட்டம் போட்ட அதிதி ஷங்கரை பார்த்து ரசிகர்கள் மிரண்டுபோனார்கள். விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக மட்டுமின்றி பாடகியாகவும் அவதாரம் எடுத்துள்ளார் அதிதி ஷங்கர். அவர் தனது முதல் பாடலை யுவன் சங்கர் ராஜாவுடன் சேர்ந்து பாடி உள்ளார். விருமன் படத்திற்காக அதிதியும் யுவனும் சேர்ந்து பாடியுள்ளார்.


Click it and Unblock the Notifications