Anirudh: ஆலுமா டோலுமா போட்ட அனிருத்தை அடி வெளுக்கும் அஜித் ரசிகர்கள்.. அடேங்கப்பா இதுதான் காரணமா?
சென்னை: மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தின் அஜித் குமார், திரிஷா நடித்த வரும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் பிறந்தநாள் போஸ்டரில் கூட அறிவித்திருந்தனர். ஆனால், தற்போது அனிருத் பேட்டி ஒன்றில் விடாமுயற்சி பொங்கல் ரிலீஸ் எனக் கூறியிருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.
லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அனிருத் கூறியுள்ளார். அதன் காரணமாக குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் சம்மருக்கு தள்ளிப் போகும் என தெரிகிறது.

ஆனால், இதுதொடர்பாக லைகா நிறுவனம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. விடாமுயற்சி அப்டேட் கொடுத்ததற்காக ட்விட்டர் சந்தில் அனிருத்தை அஜித் ரசிகர்கள் அடி வெளுக்கவில்லை. அதற்கு மேல் இன்னொரு பெரிய காரணம் உள்ளது தான் ஹைலைட்.
ஷாருக்கானுக்கு சார்.. அஜித்துக்கு இல்லையா?: தனது இசையில் சமீபத்தில் தேவரா படம் வெளியானது. வேட்டையன் படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது. அதன் பின்னர் அஜித் படம் பொங்கலுக்கு வெளியாகிறது. ஷாருக்கான் சார் படம் அடுத்த ஆண்டு லைன் அப்பில் உள்ளது. இதுவே எனக்கு பெரிய தலைவலியாக உள்ளது. மேலும், பல படங்கள் கைவசம் உள்ளன என அனிருத் பேசியிருந்தார். ஷாருக்கானுக்கு சார் போட்டும் அஜித் குமாருக்கு சார் போடாமல் வெறுமனே அஜித் என அனிருத் பேசியதை கேட்ட அஜித் ரசிகர்கள் கடுப்பாகி விட்டனர்.

மரியாதை தெரியாதா அனிருத்?: தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, இந்தி என போனதும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமாருக்கு மரியாதை கொடுக்க மாட்டீங்களா அனிருத் என அஜித் ரசிகர்கள் அவரை சோஷியல் மீடியாவில் போட்டு பொளந்து வருகின்றனர். காப்பியடித்து பாடல்களை போடும் போதே உங்களுக்கு இவ்வளவு அகங்காரமா என்றும் அஜித்திடமும் அஜித் ரசிகர்களிடமும் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என அனிருத்தை டேக் செய்து அசிங்க அசிங்கமாக திட்டியும் ட்ரோல் செய்தும் வருகின்றனர்.
பெயர் சொல்வதில் தவறில்லை: நடிகர்களின் பெயர்களை சொல்லி அழைப்பது ஒன்றும் தவறு கிடையாது என்றும் அனிருத்தும் அஜித் ரசிகர் தான். ஏதோ அவசரத்தில் சார் சொல்வதை விட்டிருக்கலாம். அதற்கு போய் இப்படி அவரை திட்டக் கூடாது என சில அஜித் ரசிகர்கள் நியூட்ரலாக கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். அனிருத் இசையில் விடாமுயற்சி படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











