தல அஜித் படத்திற்கு இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா…! டபுள் மாஸ்…!
Recommended Video

சென்னை: அஜித் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு யுவன் இசையமைக்க உள்ளார்.
அஜித் இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் தல அஜித்தின் அடுத்த படத்திற்கு யுவன் ஷங்கர்ராஜா இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் யுவன் கூட்டணி என்பது தல ரசிகர்களால் எப்போதும் கொண்டாடப்படும் கூட்டணி. அஜித் ஸ்டைலிஷாக, மாஸாக திரையில் தோன்றும் போதெல்லாம் அதற்கு கூடுதல் பலமாக யுவனின் இசை இருந்துள்ளது.
தீனா, பில்லா, பில்லா 2, மங்காத்தா என யுவன் அஜித் கூட்டணியில் வெளிவந்த படங்கள் தல ரசிகர்களின் நரம்புகளை முறுக்கேற வைத்தது. அந்த மாஸ் கூட்டணி இப்போது மீண்டும் சாத்தியமாக உள்ளது. விஸ்வாசம் திரைப்படத்திற்கு பிறகு அஜித் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று திரைப்பட புகழ் எச்.வினோத் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.
இப்படம் ஓய்வு பெற்ற வக்கீலாக அமிதாப்பச்சன் நடித்த பிங்க் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. இப்போதைக்கு யுவன் ஷங்கர் ராஜாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளனாராம். மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தல பொங்கலாக விஸ்வாசம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் டபுல் டிலைட் ஆஃபர் போன்று யுவன் அஜித் கூட்டணி செய்தி வந்துள்ளது.


Click it and Unblock the Notifications











