அல்லு அர்ஜுனுக்கு லிப் லாக்.. கண்ட இடத்துல கை வைத்து ஸ்டெப்.. வந்துச்சே பீலிங்ஸ் வீடியோ சாங் ரிலீஸ்!

சென்னை: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில், ராவ் ரமேஷ், சுனில் உள்ளிட்ட பலர் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியானது. 10 நாட்களில் தாறுமாறான வசூல் வேட்டையை நடத்தி இந்த ஆண்டின் மெகா இண்டஸ்ட்ரி ஹிட் படமாக புஷ்பா 2 மாறியுள்ளது. இந்நிலையில், ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த “வந்துச்சே பீலிங்ஸ்” வீடியோ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ராஷ்மிகா மந்தனாவுக்கு மூடு வரும் போதெல்லாம் பீலிங்ஸ் ஆகி அல்லு அர்ஜுனை பெட்ரூமுக்கு அழைத்துச் செல்லும் காட்சிகள் தியேட்டரில் ரசிகர்களுக்கு கவர்ச்சி வேட்டையாகவே அமைந்தது. முதல் பாகத்தில் சாமி சாமி பாடலிலேயே அந்த ஆட்டம் போட்ட ராஷ்மிகாவுக்கு சமந்தாவின் ஊ சொல்றியா மாமா பாடல் சங்கு ஊதி சைலன்ட் ஆக்கிய நிலையில், இந்த முறை ஸ்ரீலீலா வந்தால் கூட நான் தான் ஆட்ட நாயகி என அல்லு அர்ஜுன் தோள் மீதே ஏறி அமர்ந்து அப்படியொரு ஸ்டெப் போட்டு குத்தாட்டம் போட்டுள்ளார்.

allu arjun rashmika mandanna pushpa 2

கங்குவா படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை மற்றும் பாடல்கள் பெரிதாக வரவேற்பு பெறாத நிலையில், தெலுங்கு, தமிழ், இந்தி என அனைத்து மொழிகளிலும் பீலிங்ஸ் பாடல் தேவி ஸ்ரீ பிரசாத்தின் துள்ளலான இசையில் லிரிக் வீடியோவே பல மில்லியன் வியூஸ்களை அள்ளி ஹிட் அடித்தது.

வந்துச்சே பீலிங்ஸ் வீடியோ பாடல்: தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் விவேகா பாடல் வரிகளில் ராஜலக்‌ஷ்மி மற்றும் செந்தில் கணேஷ் ஜோடியாக இணைந்து பாடிய பீலிங்ஸ் பாடல் தற்போது டி சீரிஸ் தமிழ் யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனாவின் வெறித்தனமான ஆட்டத்தை ரசிகர்கள் வாயை பிளந்து ரிப்பீட் மோடில் பார்த்து வருகின்றனர். தியேட்டரில் பெரிய திரையில் ஒருமுறை பார்த்தே இன்னமும் அதே பீலிங்ஸ்லில் இருந்த ரசிகர்கள் தற்போது ராஷ்மிகாவின் கவர்ச்சி நடனத்தை போட்டு போட்டு பார்த்து பீலிங்ஸ் ஆகிவருகின்றனர். எக்கச்சக்க யூடியூப் பார்வைகளை அள்ளி இதுவும் ரெக்கார்டு படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அல்லு அர்ஜுனுக்கு லிப் லாக்: பீலிங்ஸ் பாடலின் ஆரம்பத்தில் அல்லு அர்ஜுனுக்கு ராஷ்மிகா மந்தனா லிப் லாக் கொடுக்கும் காட்சியுடனே பாடல் தொடங்குகிறது. பாடல் முழுக்கவே ஜலபுல ஜங் என கவர்ச்சி துள்ளல் அதிகமாக உள்ள நிலையில், குழந்தைகளுக்கு போட்டுக் காட்ட வேண்டாம் என்றும் நெட்டிசன்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X