‘அமரகாவியம்’ ஆடியோ வெளியீடு... திரிஷா - நயன்தாரா இணைந்து வெளியிட்டனர்!
சென்னை: நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோவாக நடித்துள்ள படம் அமராகாவியம். 'நான்' படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை, ஆர்யா தனது தி ஷோ பீப்பிள் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, கடந்த சனிக்கிழமையன்று சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. இந்த விழாவில் நடிகைகள் நயன்தாரா, திரிஷா இருவரும் கலந்துகொண்டு பாடல்களை வெளியிட்டார்கள்.
இருவரிடமும் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ரம்யா சில கேள்விகளை கேட்டார். அவர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு திரிஷா அளித்த பதில்களும் வருமாறு:-

கலந்து கொள்ள காரணம்...
கேள்வி:- மற்ற பட விழாக்களில் எல்லாம் நீங்கள் கலந்து கொள்வதில்லை. குறிப்பாக, இந்த படவிழாவில் மட்டும் கலந்து கொள்வதற்கு காரணம் என்ன?
திரிஷா பதில்:- ஆர்யாதான் காரணம்.

நயனும் வருகிறார்...
இந்த படவிழாவுக்கு வரும்படி அவர் என்னை அழைத்தபோது, நயன் வருகிறாரா? என்று கேட்டேன். வருகிறார் என்று ஆர்யா சொன்னார். நயன் வருவதால் நானும் கண்டிப்பாக வருகிறேன் என்றேன்.

என் நண்பர்...
அதோடு, ஜேமி (ஆர்யாவின் சொந்த பெயர், ஜேம்ஷத்) நல்ல நண்பர். அவர் அழைத்ததால் கலந்து கொண்டேன்.

கடலை போட்டதில்லை...
கேள்வி:- ஆர்யா எல்லா கதாநாயகிகளுக்கும் பிடித்தவராக இருப்பது எப்படி? படப்பிடிப்பின்போது அவர் உங்களை எப்படி கவனித்துக் கொள்வார்?
திரிஷா பதில்:- ஆர்யா எப்போதுமே என்னிடம் ‘கடலை போட்டு' வழிந்ததில்லை.

ஒரே மாதிரி பழகுவார்...
அவர் ஆளுக்கு ஆள் வித்தியாசம் பார்க்க மாட்டார். எல்லோரிடமும் ஒரே மாதிரி பழகுவார். படப்பிடிப்பிலும் அப்படித்தான். அதனால் அவரை எல்லோருக்கும் பிடிக்கிறது' என்றார்.


Click it and Unblock the Notifications











