கவர்ச்சி பொங்கும் பாடல்.. இணையத்தை கிறங்கடித்த அமெரிக்காவின் அரியானா

பிரபல பாடகி அரியானா கிராண்டே தன்னுடைய அடுத்த பாடலை வெளியிட்டுள்ளார்.

நியூயார்க்: பிரபல அமெரிக்க பாடகி அரியானா கிராண்டே தன்னுடைய ஸ்வீட்னர் ஆல்பத்திலிருந்து அடுத்த பாடலை வெளியிட்டு இணையத்தை கலக்கி வருகிறார்.

ஃப்ளோரிடா மாகானத்தில் 1993 ஆம் ஆண்டு பிறந்த அரியானா 2010 ஆம் ஆண்டு பிராட்வே ம்யூசிகல் என்ற நிறுவன இசைக்குழுவில் பங்கேற்று பாடத் தொடங்கினார். பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ள இவர், ஸ்னோவ்பிளேக்ஸ் தி ஒயிட் கொரில்லா, அண்டர்டாக்ஸ், சூலாந்தர் 2 போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

American singer Ariana Grande released her song!

இசைக்குழுவில் இணைந்து பாடத்தொடங்கியது முதலே, "சவுக்கார்பேட்டை பொண்ணு... சாக்கலேட்டில் நனைத்த பன்னு" என்பதுபோல் எல்லோரும் விரும்பக்கூடிய பாடகியாக வளர்ந்தார்.

ப்ரேக் ஃப்ரீ ஃபிட், டேஞ்சரஸ் வுமென், சைடு டு சைடு ஃபிட் போன்ற பாடல்கள் மூலம் இவருடைய துள்ளல் அழகையும், கிரங்கடிக்கும் குரலையும் கண்ட இளைஞர்கள் ஈ... என்று இண்ட்ர்னெட் முன்னே அமர்ந்தனர். அவருடைய வெள்ளைக்க்குயில் மேனியின் மூலம் அகில உலக இளைஞர்களுக்கும் அழகிய அபினாய் மாறினார் அரியானா.

கடந்த ஏப்ரல் மாதம் இவர் வெளியிட்ட நோ டியர்ஸ் லெஃப்ட் டூ க்ரை என்ற பாடலை முப்பத்து ஒன்பது கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்து புளகாங்கிதம் அடைந்தனர்.

தற்போது, கடவுள் ஒரு பெண் என்று விளக்கும் காட் இஸ் எ வுமென் என்ற பாடலை வெளியிட்டுள்ளார். மைக்கலேஞ்சலோவின் ஆதாம் பற்றிய சிந்தனையை மீண்டும் கற்பனை செய்யும் வகையில் இந்தபாடல் அமைந்துள்ளது. கடவுளின் குரலாக பாப் உலகின் ராணியான மடோனாவின் குரலை பயன்படுத்தியிருப்பது இந்த பாடலுக்கு டபுல் புரமோஷனைக் கொடுத்துள்ளது.

முழுக்க முழுக்க பெண்ணியவாத கருத்துகள் இதில் இருக்கிறது என விமர்சனங்கள் எழுந்தாலும், ஒரு உயிரை உருவாக்கும் சக்தி பெண்ணுக்கு இருக்கிறதென்பதால் பெண் கடவுளுக்கு நிகராக போற்றப்பட வேண்டியவள் என்று நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் தட்டுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X