பலத்த பாதுகாப்புடன் 9ம் தேதி கோச்சடையான் இசை வெளியீடு: ரஜினியுடன் அமிதாப் பங்கேற்பு
சென்னை: ரஜினிகாந்தின் கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 9ம் தேதி சென்னையில் நடக்கிறது. விழாவிற்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வருகிறார்.
சௌந்தர்யா அஷ்வின் தனது தந்தை ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, ஷோபனா, நாசர், சரத்குமார் ஆகியோரை வைத்து எடுத்துள்ள படம் கோச்சடையான். மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 11ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

9ம் தேதி
வரும் மார்ச் மாதம் 9ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் கோச்சடையான் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

அமிதாப் பச்சன், ரஜினி
இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டாருடன் பாலிவுட் ஜாம்பவானான அமிதாப் பச்சன் கலந்து கொள்கிறார்.

பலத்த பாதுகாப்பு
ரஜினி, அமிதாப் என்று இரண்டு பெரிய நட்சத்திரங்கள் கலந்து கொள்வதால் இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

பூத்நாத் ரிட்டர்ன்ஸ்
அமிதாப் பச்சன் நடித்துள்ள பூத்நாத் ரிட்டர்ன்ஸ் என்ற படம் கோச்சடையான் ரிலீஸாகும் அதே ஏப்ரல் 11ம் தேதி ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











