நவம்பர் 10 ம் தேதி அனேகன் இசை வெளியீடு
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகிவரும் தனுஷின் அடுத்த படமான அனேகன் இசையை வரும் நவம்பர் 10-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அம்ரியா தஸ்தூர் என்ற புதுமுகம் நடித்துள்ளார். கார்த்திக் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
காதலும் ஆக்ஷனும் கலந்த கேவி ஆனந்த் டைப் படம் இது.

முடிந்தது
படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசருக்கும் நல்ல வரவேற்பு. அடுத்தகட்டமாக படத்தின் பாடல்களை வெளியிடவுள்ளனர்.

நவம்பர் 10
இது தொடர்பாக கே.வி.ஆனந்த் தனது டுவிட்டரில் பக்கத்தில், ‘அனேகன்' படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் தயாராகி வருகிறோம். இதற்காக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி உள்ள பாடல்களை நவம்பர் 10-ம் தேதி வெளியிட உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

வைரமுத்து
படத்தின் பாடல்களை வைரமுத்து, அமுதன், கபிலன் வைரமுத்து ஆகியோர் எழுதி உள்ளதாகவும் கே.வி.ஆனந்த் கூறியுள்ளார்.

வேலையில்லா பட்டதாரிக்குப் பின்
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வேலையில்லா பட்டதாரி பெரும் வெற்றி பெற்றது. எனவே அனேகன் படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











