நாளை தனுஷ் அனேகன் இசை வெளியீடு
கேவி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அனேகன் படத்தின் இசை வெளியீடு நாளை சென்னையில் நடக்கிறது.
கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக அமிரா தஸ்தூர் நடித்துள்ளார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, வைரமுத்து, சிஎஸ் அமுதன், கபிலன் வைரமுத்து, ரோகேஷ் ஆகியோர் பாடல் எழுதியுள்ளனர்.

பாடல் வெளியீட்டு விழா நாளை ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு வில்லிவாக்கத்தில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கில் நடக்கிறது. படத்தின் தயாரிப்பாளரும் ஏஜிஎஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
திரையுலகப் பிரபலங்கள் பலரும் பங்கேற்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











