அண்ணாமலை ரஜினி கெட்அப்பில் அனிருத்...செம கலக்கலான பாடல் வெளியீடு

சென்னை : டைரக்டர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் நான்காவதாக உருவாகி உள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தின் ஷுட்டிங் முடிக்கப்பட்டு, ஃபஸ்ட் சிங்கிளான ரெண்டு காதல் பாடல் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

Anirudh dancing in katthu vakula rendu kadhal second look

இந்நிலையில் படத்தின் செகண்ட் சிங்கிள், டைரக்டர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்டது. Two Two Two என ஆரம்பிக்கும் இந்த பாடலை அனிருத், சுனிதி சவ்கான், சஞ்சனா கல்மன்ஜி ஆகியோர் பாடி உள்ளனர். மூன்று டூ என பாடல் துவங்குவதால், இந்த பாடலையும் பகல் 2.22 மணிக்கு ரிலீஸ் செய்தனர்.

ஏற்கனவே செகண்ட் சிங்கிள் பாடல் ரிலீசுக்காக விக்னேஷ் சிவன் வெளியிட்ட ப்ரோமோ வீடியோவில் வெள்ளை நிற உடையணிந்த இளைஞர் ஒருவர் நடனமாட தயாராவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது. உடனடியாக இது அனிருத் தான் என பலர் கண்டுபிடித்து கமெண்ட் செய்தனர்.

ரசிகர்கள் கணித்தது போல் செகண்ட் சிங்கிள் பாடலில் அனிருத் தானே இசையமைத்து, பாடி, நடனமாடி உள்ளார். குழந்தைகளுடன் சேர்ந்து மாடர்ன் டிரெஸ் மட்டுமின்றி, அண்ணாமலை படத்தில் வந்தேன்டா பால்காரன் பாடலில் ரஜினி தோன்றுவதை போல் வெள்ளை நிற உடையில், இடுப்பில் துண்டு, நெற்றியில் பட்டை என தோன்றி ஆடுகிறார்.

செம ஸ்டைலாக, துள்ளல் இசையுடன் ஆட்டம் போட வைக்கும் இந்த பாடல் இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ளது. இந்த படத்தின் மூலம் அனிருத் நடிகராகவும் அறிமுகமாக உள்ளார். ஒரு பாடலில் மட்டும் அவர் தோன்றி ஆட உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா லீட் ரோலில் நடிக்கும் இந்த படம் ரொமான்டிக், காமெடி கலந்த முக்கோண காதல் கதையை கொண்டது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. விரைவில் படத்தின் டீசர், டிரைலர் உடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X