ரொம்ப புதுசா இருக்கே.. தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் அப்படியொரு பாடலா? லீக்கான தகவல்!
சென்னை: தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தின் பாடலுக்காக இசையமைப்பாளர் ராக் ஸ்டார் அனிருத் புதிய முயற்சியை கையாண்டு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
கோலமாவு கோகிலா படத்தை இயக்கி வெற்றி கண்ட இயக்குநர் நெல்சன் அடுத்ததாக சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கி இருந்தார்.
அந்த படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

சன் பிக்சர்ஸ்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜார்ஜியா, சென்னை, டெல்லி என படம் வேற லெவலில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டு வருகிறது. இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மலையாள திரையுலகின் இளம் நடிகை அபர்ணா தாஸும் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

வில்லனான இயக்குநர்
இந்த படத்தில் தளபதி விஜய்க்கு மூன்று வில்லன்கள் எனக் கூறப்படுகின்றன. மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இயக்குநர் செல்வராகவன் இந்த படத்தில் விஜய்க்கு வில்லன்களாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சாணிக் காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் நடித்து முடித்துள்ள செல்வராகவன் அடுத்ததாக விஜய் உடன் இணைந்து மிரட்ட உள்ளார்.

மீண்டும் அனிருத்
மெர்சல், சர்கார், பிகில் என ஏ.ஆர். ரஹ்மான் உடன் இணைந்து பணியாற்றி வந்த நடிகர் விஜய் மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ராக் ஸ்டார் அனிருத் உடன் இணைந்து இந்த படத்தில் பணியாற்றி வருகிறார். இயக்குநர் நெல்சனின் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து இந்த படத்திலும் அனிருத் தான் அசத்தலான இசையை அமைத்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் வரிகளில்
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் பாடலாசிரியராகவும் மாறிய சிவகார்த்திகேயன் தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்திற்கும் ஒரு பாடலை எழுத உள்ளதாக தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் அந்த பாடல் சென்னையில் படமாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது பீஸ்ட் பட பாடல் குறித்த இன்னொரு சுவாரஸ்யமான தகவலும் கசிந்திருக்கிறது.

அரபி மொழியில்
சர்வதேச கதையை பேசும் படமாக பீஸ்ட் படம் உருவாகி வரும் நிலையில், விஜய்யும் பூஜா ஹெக்டேவும் நடனமாடும் ஒரு பாடலில் தமிழ் மற்றும் அரபு மொழி கலந்து அனிருத் புதுவிதமாக உருவாக்கி இருப்பதாகவும் ஹாட் அப்டேட்கள் கிடைத்துள்ளன.

பொங்கலுக்கு வருமா
மின்னல் வேகத்தில் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பை இயக்குநர் நெல்சன் இயக்கி வருகிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தின் படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார். வலிமையுடன் பீஸ்ட் திரைப்படம் வரும் பொங்கலுக்கு மோதும் என்றும் சில பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ஆனால், பீஸ்ட் படம் பான் இந்திய படமாக பிரம்மாண்டமாக உருவாகி வருவதால் அதன் போஸ்ட் புரொடக்ஷனுக்கு டைம் எடுக்கும் என்றும் படம் சம்மருக்கு தான் வெளியாகும் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

பக்கா கதை
நடிகர் விஜய் நடிப்பில் இதுவரை வராத அளவுக்கு ஒரு டார்க் ஆக்ஷன் காமெடி திரைப்படமாக பீஸ்ட் படம் உருவாகி வருவதாகவும், இயக்குநர் சொன்ன பக்கா கதை பிடித்துப் போகவே தான் மற்ற பெரிய இயக்குநர்களின் படங்களையும் பிக் பண்ணாமல் விஜய் இந்த படத்தை தேர்வு செய்தார் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











