பிரேம்ஜி இசையில் பாடிய அனிருத், ஜி.வி. பிரகாஷ்
சூர்யா, கார்த்தியை தொடர்ந்து பிரேம்ஜியிடம் சிக்கிய அனிருத், ஜி.வி.பிரகாஷ்!
சென்னை: சூர்யா, கார்த்தியை தொடர்ந்து அனிருத் மற்றும் ஜி.வி.பிரகாஷ் பிரேம்ஜி இசையில் பாடியுள்ளனர்.
இயக்குனர் வெங்கட் பிரபுவின் பார்ட்டி திரைப்படம் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. சிம்புவின் மாநாடு திரைப்படத்தை இயக்கும் வெங்கட்பிரபு மும்பையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மாஷா அல்லா என குறும்படம் ஒன்றை வெளியிட்டார்.

மாஷா அல்லா குறும்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் சினிமாத் துறையில் இருப்பவர்களும் பாராட்டினர்.
வெங்கட்பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவுக்கு பதிலாக பிரேம்ஜி அமரன் பார்ட்டி படத்திற்கு இசையமைக்கிறார் என்பது தெரிந்த விஷயம். சமீபத்தில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியிடப்பட்டது.
பிரேம்ஜி அமரனின் இசையில் ச்சா... ச்சா... சாரே என்று சூர்யா, கார்த்தி பாடிய பாடல் 1.4 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்ட் அடித்தது. இப்போது இப்படத்தில் அனிருத் ஒரு பாடலையும், ஜிவி.பிரகாஷ் மற்றொரு பாடலையும் பாடியுள்ளனர்.
பார்ட்டி திரைப்படதில் ஜெய், ஷாம், சத்யராஜ், ஜெயராம், சிவா, சந்திரன், நாசர், சம்பத், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என ஒரு மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











