துபாயில் அரபிக்குத்து போட தயாராகும் அனிருத்...அதுவும் லைவில்...எப்போ தெரியுமா ?

சென்னை : பான் வேல்ட் பாடலாக அரபிக்குத்து போட்டு, சோஷியல் மீடியாவை கதிகலங்க வைத்துள்ள அனிருத், அடுத்தபடியாக துபாயில் லைவாக அரபிக்குத்து போட போகிறாராம். இதில் ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத், ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலாக அரபிக்குத்து என டைட்டில் வைத்த பாடலை உருவாக்கி உள்ளார். சிவகார்த்திகேயன் எழுதி உள்ள இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்து, டாக்டர் படத்தில் செல்லம்மா பாடலை பாடிய ஜோனிடா காந்தியுடன் இணைந்து பாடியுள்ளார். காதலர் தின ஸ்பெஷலாக இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ பிப்ரவரி 14 ம் தேதி வெளியிடப்பட்டது.

சாதனை படைத்த அரபிக்குத்து

சாதனை படைத்த அரபிக்குத்து

அரபிக்குத்து ப்ரோமோ வந்ததில் இருந்தே , அது என்ன அரபிக்குத்து என்பது தான் சோஷியல் மீடியாவில் பேச்சாக இருந்து வந்தது. பாடல் வெளியிடப்பட்டதில் இருந்து தொடர்ந்து பார்வைகள் குவிந்து வருகிறது. உலக அளவில் மிக குறுகிய காலத்தில் அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட பாடல்கள் பட்டியலில் அரபிக்குத்தும் இடம்பிடித்து விட்டது. இதுவரை 68 மில்லியன் பார்வைகளை இந்த பாடல் பெற்று, நம்பர் ஒன் டிரெண்டிங் பாடலாக மாறி உள்ளது.

துபாயில் அரபிக்குத்து

துபாயில் அரபிக்குத்து

இந்நிலையில் துபாயில் லைவ் கச்சேரி ஒன்றை நடத்த போவதாக அனிருத் அறிவித்துள்ளார். இதில் பல அரபிக்குத்து காத்திருக்கிறது என்று வேறு சொல்லி உள்ளார். இதனால் ரசிகர்கள், ஒரு அரபிக்குத்தவே தாங்க முடியவில்லை. சோஷியல் மீடியாவில் எந்த பக்கம் திரும்பினாலும் இந்த பாடலுக்கு யாராவது ஒருவர் ஆட்டம் போட்டு, வீடியோ வெளியிட்டு வருகிறார். இதில் லைவ் கச்சேரியில் பல அரபிக்குத்தா...அதுவும் அரபு நாட்டிலேயேவா என கேட்டு வருகின்றனர்.

 மீண்டும் லைவ் கச்சேரி

மீண்டும் லைவ் கச்சேரி

பிப்ரவரி 23 ம் தேதி துபாய் எக்ஸ்போவில் தான் அனிருத்தின் லைவ் இசை கச்சேரி நடைபெற உள்ளதாம். கொரோனா காரணமாக மேடை கச்சேரிகள், லைவ் கச்சேரிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்து வருகிறது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால், லைவ் கச்சேரி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாம்.

Recommended Video

அட இவருமா... மனைவியுடன் சேர்ந்து டைரக்டர் அட்லீ செய்த காரியத்தை பார்த்தீங்களா ?
அரபு நாட்டிலேயே அரபிக்குத்தா

அரபு நாட்டிலேயே அரபிக்குத்தா

சமீப நாட்களில் அனிருத் இசையமைத்து வரும் பாடல்கள் பலவும் கவனத்தை ஈர்த்து, செம ஹிட் ஆகி வருகிறது. காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் டூட்டூட்டூ பாடல், ரஜினி படத்திற்காக அவர் இசையமைத்த பாடல்கள் என வரிசையாக ஹிட் அடித்து வருகின்றன. ஆனால் மற்ற பாடல்கள் அனைத்தையும் மிஞ்சும் அளவிற்கு அரபிக்குத்து பட்டிதொட்டியில் உள்ளவர்களையும் கவர்ந்துள்ளது. இந்த பாடல் துபாயிலும் ஒலிக்க போவதால், வரவேற்பு எப்படி இருக்கும் என்பதை பார்க்க அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X