பாடகர் அறிவின் குரலில்… ஏ ஃபார் அண்ணாத்த பாடல் வெளியீடு !
சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படத்தை காண இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், இப்படத்தின் ஏ ஃபார் அண்ணாத்த பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
இப்படத்திற்கு தணிக்கைகுழு U/A சான்றிதழ் அளித்துள்ளது. அண்ணாத்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நிச்சயம் புயலைக் கிளப்பப்போகிறது.
அண்ணாத்த திருவிழாவை அவரது ரசிகர்கள் கொண்டாடத் தயாராகி விட்டனர்.

அண்ணாத்த
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் படம் உருவாகியுள்ள படம் அண்ணாத்த. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அண்ணன் தங்கை பாசம்
இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். அண்ணாத்த படம், அண்ணன் , தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்ட திரைப்படமாக உருவாகி உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி குடும்ப பின்னணி கொண்ட திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் மீனா, குஷ்பு எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என அனைவரும் எதிர் பார்த்த நிலையில், இவர்கள் இருவரும் ரஜினிக்கு முறைப்பெண்ணாக நடித்துள்ளனர்.

பெரும் வரவேற்பு
இத்திரைபடம் தீபாவளித் திருநாளான நாளை தியைரங்கில் வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் பாடலாக ரஜினியின் ஒபனிங் சாங்கான அண்ணாத்த அண்ணாத்த பாடல் வெளியிடப்பட்டது. பின்னர் டூயட் பாடலான சாரல் காற்றே வெளியிடப்பட்டது. பின்னர் மூன்றாவதாக மருதாணி'என்ற பாடல் வெளியிடப்பட்டது. இந்த பாடல்களும், படத்தின் டீசரும் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஏ ஃபார் அண்ணாத்த
இந்நிலையில், ஏ ஃபார் அண்ணாத்த பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை தெருக்குரல் அறிவு எழுதி பாடி உள்ளார். ரஜினியின் ஸ்டைல்... மாஸ் என பாடல் வரிகளில் கெத்துக்காட்டி உள்ளார் அறிவு. அறிவின் குரல் பட்டையை கிளப்பி உள்ளது. இணையத்தில் வெளியாகி உள்ள இந்த லிரிக் வீடியோ டிரெண்டிங்காகி உள்ளது.


Click it and Unblock the Notifications











