‘ஆண்டனி’... இந்தியாவின் முதல் கிளாஸ்ட்ரோஃபோபிக் படத்தின் ஆடியோ வெளியீடு!
இந்தியாவின் முதல் கிளாஸ்ட்ரோஃபோபிக் படமான ஆண்டனியின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: மனிதன்ஒருவன் பூமிக்கு அடியில் சிக்சிக்கொள்ளும் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள, இந்தியாவின் முதல் கிளாஸ்ட்ரோஃபோபிக் படமான ' ஆண்டனி'யின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
ஆண்டனி புரோடக்ஷன்ஸ் சார்பில் வெப்பம் ராஜா மற்றும் கிறிஸ்டோபர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் 'ஆண்டனி' . இந்தியாவின் முதல் கிளாஸ்டோஃபோபிக் வகை படமாக வெளிவரவுள்ள இந்த படத்தின் மூலம் படத்தொகுப்பாளர் குட்டி குமார் இயக்குனராக அறிமுகமாகிறார்.

புதுமுகங்கள் நிஷாந்த், வைஷாலி ஆகியோர் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகின்றனர். பிரபல மலையாள நடிகர் விச்சியாசமான பரிமாணத்தில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தயாரிப்பாளர் வெப்பம் ராஜா வில்லனாக அறிமுகமாகிறார்.
இந்த படத்தின் தொழில்நுட்ப குழுவினர் உள்பட அனைவருமே புதுமுகங்கள். இந்த படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் மூலம் சிவாத்மிகா என்ற இளம்பெண் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
படத்தின் பாட்ல் மற்றும் டிரெய்லரை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட்டார். நடிகைகள் ஜெயசித்ரா, ரேகா, தயாரிப்பாளர்கள் தேனப்பன், தங்கதுரை, இயக்குனர்கள் பிரவின்காந்த், யுரேகா உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.


Click it and Unblock the Notifications











