‘காலா’வால் எனது படத்தை தள்ளி வைத்துள்ளனர்.. மேடையில் பொங்கிய ‘காட்டுப்பய சார் இந்தக் காளி’ இயக்குநர்

காலா படத்தால் தனது பட ரிலீஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் யுரேகா தெரிவித்துள்ளார்.

சென்னை: ரஜினியின் காலா படத்தால் தனது காட்டுப்பய சார் இந்தக் காளி பட ரிலீஸ் தேதி தள்ளிப் போய் இருப்பதாக ஆண்டனி பட விழாவில் இயக்குநர் யுரேகா தெரிவித்துள்ளார்.

ஆண்டனி புரோடக்ஷன்ஸ் சார்பில் வெப்பம் ராஜா மற்றும் கிறிஸ்டோபர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் 'ஆண்டனி' . இந்தியாவின் முதல் கிளாஸ்டோஃபோபிக் வகை படமாக வெளிவரவுள்ள இந்த படத்தின் மூலம் படத்தொகுப்பாளர் குட்டி குமார் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் நேற்று நடைபெற்றது.

படத்தின் பாடல் மற்றும் டிரெய்லரை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட்டார். நடிகைகள் ஜெயசித்ரா, ரேகா, தயாரிப்பாளர்கள் தேனப்பன், தங்கதுரை, இயக்குனர்கள் பிரவின்காந்த், யுரேகா உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய ஜெயசித்ரா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் தங்களது மகன்களின் முதல் பட ரிலீஸ் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

நேரடித் தாக்கு:

நேரடித் தாக்கு:

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் யுரேகா, " ஆண்டனி படம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள். ஜெயசித்ரா அவர்கள் யாரையும் குறிப்பிடாமல் முறைமுகமாக தான் பேசினார். ஆனால் நான் நேரடியாகவே சொல்கிறேன்.

கோரிக்கை:

கோரிக்கை:

காலா ரிலீசுக்காக எனது படத்தை தள்ளி வைத்துள்ளனர். இந்தி மற்றும் மலையாள சினிமாக்களில் இதுபோன்ற நிலை இல்லை. கமர்சியல் படங்களுக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் மாற்று சினிமாக்களுக்கும் கொடுக்கப்படுகிறது. சிறிய பட்ஜெட் படங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்" என இவ்வாறு அவர் பேசினார்.

காட்டுப்பய சார் இந்தக் காளி:

காட்டுப்பய சார் இந்தக் காளி:

மதுரை சம்பவம், சிவப்பு எனக்கு பிடிக்கும், தொப்பி ஆகிய படங்களை இயக்கியவர் யுரேகா. இவர் தற்போது, காட்டுப்பய சார் இந்த காளி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஒயிட் ஹார்ஸ் சினிமாஸ், யுரேகா சினிமா ஸ்கூல் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில், மத்திய சென்னை ஜெய்வந்த், தாயம் ஐரா, ஆடுகளம் நரேன், மூணாறு ரமேஷ், மாரிமுத்து, சி.வி.குமார் நடித்துள்ளனர்.

ரஜினி, கமல் மீது தாக்கு:

ரஜினி, கமல் மீது தாக்கு:

ஏற்கனவே, இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின் போது, மேடையில் இயக்குநர் பாரதிராஜா, ‘ரஜினி மற்றும் கமலின் அரசியல் பிரவேசம்' குறித்து மறைமுகமாக காரசாரமாகப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது என்பது நினைவுக் கூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X