Don't Miss!
- News
"அனைத்து மொழிகளும் நாட்டின் அடையாளமே! மொழி சர்ச்சை கிளப்ப சிலர் முயற்சி!" பிரதமர் மோடி குற்றச்சாட்டு
- Lifestyle
ஆரோக்கியமான இதயம் மற்றும் குடல் இயக்கத்திற்கு இந்த ஒரு பொருளை தினமும் சாப்பிடுங்க போதும்...!
- Finance
ஊபரில் இனி ‘நோ கேன்சலேஷன்', ஆனால் கட்டணம் உயரும்?
- Automobiles
காரை அழகாக்கிய ஒரே காரணத்திற்காக அபராதம் விதித்த நீதிமன்றம்... எவ்வளவுனு தெரிஞ்சா மிரண்டுருவீங்க?
- Sports
மும்பைக்கு ஆதரவு அளிக்கும் கோலி.. மைதானத்திற்கு நேரில் செல்வோம் என குசும்பு.. ரோகித் காப்பாத்துப்பா
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் சாதனம் வாங்க சரியான நேரம்- அமேசானில் வழங்கப்படும் அதிரடி தள்ளுபடி!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சேர்ந்து இருப்பது ஒரு கலை... மனைவிக்காக உருகிய ஏஆர் ரஹ்மான்
சென்னை : இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இந்திய அளவில் மிகச்சிறந்த இசையமைப்பாளராக, அனைவரையும் கவர்ந்து வருகிறார். இன்றைய தினம் அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள போஸ்ட் அனைவரையும் கவர்ந்துள்ளது.
குத்
வித்
கோமாளி
3
ல்
என்ட்ரி
கொடுக்கும்
டாப்
ஹீரோ...
சர்ப்ரைஸ்
ஆன
ரசிகர்கள்

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான்
இசைப்புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ஏஆர் ரஹ்மான், ரோஜா காலத்திலும் சரி, தற்போது அட்ராங்கி ரே காலகட்டத்திலும் சரி, இவரது இசை அனைவரையும் உருக வைத்து வருகிறது. ஆனால் இந்த இரண்டு படங்களுக்கான இத்தனை ஆண்டுகால இடைவெளியில் மனிதர் தன்னுடைய கேரக்டரில் எந்தவித மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கிறார்.

ஆஸ்கார் விருது நாயகன்
முன்னணி இசையமைப்பாளர், ஆஸ்கார் விருது நாயகன் என்ற பல சிறப்புகள் இவரது புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றன. ஆயினும் தன்னுடைய அடக்கத்தை அப்படியே மெயின்டெயின் செய்து வருகிறார். தொடர்ந்து பல சிறப்பான பாடல்களை கொடுத்து வருகிறார்.

அடுத்தடுத்த படங்கள்
தமிழில் தற்போது பொன்னியின் செல்வன், இரவின் நிழல், வெந்து தணிந்தது காடு மற்றும் மாமன்னன் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றி வருகிறார். இதில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் மிகச்சிறந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

மனைவியுடன் புகைப்படம்
சமூக வலைதளங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் ஏஆர் ரஹ்மான், அவ்வப்போது சில புகைப்படங்கள் மற்றும் தகவல்களை பகிர்ந்து வருகிறார். தன்னுடைய மகனின் புகைப்படங்களையும் பகிர்ந்துவரும் இவர் தன்னுடைய மனைவியுடனான புகைப்படங்களை வெளியிட்டதில்லை.

27வது திருமண நாள்
இந்நிலையில் இன்றைய தினம் தனது 27வது திருமண நாளை கொண்டாடி வரும் ஏஆர் ரஹ்மான், தன்னுடைய மனைவி சாய்ரா பானுவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ஒன்றாக இருப்பது ஒரு கலை என்றும் எல்லா புகழும் இறைவனுக்கே என்றும் கேப்ஷனில் தெரிவித்துள்ளார். அவரது திருமண நாளையொட்டி பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.