ரஜினிகாந்தின் அந்த படத்தில் மைக்கேல் ஜாக்சன் பாட வேண்டியது.. ஆனால்?.. ஏ.ஆர். ரஹ்மான் சொன்ன சீக்ரெட்!
சென்னை: இந்தியன் 2 திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக காத்திருக்கிறது. ஆனால், நிச்சயம் ஏ. ஆர். ரஹ்மான் ரசிகர்கள் இந்தியன் 2 படத்தில் அவரது இசையை பெரிதும் மிஸ் செய்வார்கள். இந்தியன் 2 படத்தின் பாடல்கள் வெளியானதில் இருந்தே அனிருத் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் கம்பேரிசன் சோசியல் மீடியாவில் அதிகரித்த வண்ணமே உள்ளன.
அனிருத்தே ஏ.ஆர். ரஹ்மான் அளவுக்கு என்னால் இசையமைக்க முடியாது என்றும் தலைவன் ஏ.ஆர். ரஹ்மான் தான். என்னால் முடிந்த இசையை இந்த படத்துக்கு கொடுத்திருக்கிறேன் என சரண்டர் ஆன பின்னரும் ரஹ்மான் ரசிகர்கள் அனிருத்தையும் இந்தியன் 2 படத்தையும் விடுவதாக இல்லை.

இந்நிலையில், மலேசியாவில் திங்கள் அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பங்கேற்றுப் பேசிய ஏ. ஆர். ரஹ்மான் மைக்கேல் ஜாக்சனை சந்தித்தது பற்றியும் ரஜினிகாந்தின் படத்திற்கு அவர் ஒரு பாடலைப் பாட வேண்டியது ஆனால், மிஸ் ஆகிவிட்டது என்று கூறி்யுள்ளார்.
மைக்கேல் ஜாக்சனுக்கு நோ: பாப் உலகின் அரசனாக இருந்த மைக்கேல் ஜாக்சனை சந்திக்க வேண்டும் என்பதற்காக அவரது அலுவலகத்துக்கு ஒரு மெயில் போட்டேன். ஆனால், அதற்கு எந்த ஒரு பதிலும் வரவில்லை. அதன் பின்னர் ஆஸ்கருக்கு நாமினேட் ஆன நிலையில், மைக்கேல் ஜாக்சன் அலுவலகத்தில் இருந்து சந்திப்பதற்காக அழைப்பு வந்தது. ஆனால், ஆஸ்கர் வென்றுவிட்டு வந்து சந்திக்கிறேன் என அந்த அழைப்பை நிராகரித்து விட்டேன் என ஏ.ஆர். ரஹ்மான் மலேசியாவில் மாஸ் ஸ்பீச் கொடுத்துள்ளார்.
ரொம்பவே கனிவானவர்: ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த ஜெய்ஹோ பாடலுக்கு இது கிடைத்தபோது, ஆஸ்கர் விருதைப் பெற்று அடுத்த நாளே மைக்கேல் ஜாக்சன் அவரது இல்லத்தில் சென்று சந்தித்தேன். அவர் ரொம்பவே கனிவானவர். தனது குடும்பத்தையும் குழந்தைகளையும் அறிமுகம் செய்து வைத்தார். இசைப் பற்றியும் உலக அமைதி குறித்தும் பேசினோம். இருவரும் இணைந்து பணியாற்றலாம் என்றும் மைக்கேல் ஜாக்சன் கூறினார்.
எந்திரன் படத்தில் பாட வேண்டியது: சென்னை திரும்பியதும் இந்த விவரத்தை எல்லாம் இயக்குநர் ஷங்கரிடம் கூறினேன். ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தில் அவரை பாட வைக்க முடியுமா? எனக் கேட்டார். அவர், தமிழில் பாடுவாரா? எனக் கேட்டேன். எப்படி பாடினாலும் எனக்கு ஓகே என்றார் ஷங்கர். அவரை தொடர்பு கொண்டு பாட வைக்கலாம் என நினைப்பதற்கு முன்னதாகவே அவர் உயிரிழந்து விட்டார். இல்லையென்றால், கண்டிப்பாக எந்திரன் படத்தில் மைக்கேல் ஜாக்சனை பாட வைத்திருப்பேன் என ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.
ராயன் இசை: ஷங்கரின் இந்தியன் 2 படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்காத நிலையில், இந்த மாதம் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தில் ரஹ்மான் பாடல்களை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் தனுஷ் ஸ்டேஜ் ஏறி பாடி ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்திருந்தனர். இந்தியன் 2 நாளை வெளியான பின்னர், மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்கள் அனிருத்தை கிண்டல் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் என தெரிகிறது. இந்தியன் 2 படத்துக்குத் தேவையான இசையை அனிருத் வழங்கியிருப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











