For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மரியானுக்காக ஏ.ஆர்.ரஹ்மானுடன் கை கோர்த்த யுவன்!

    By Mayura Akilan
    |

    ஒரு இசை அமைப்பாளர் இசையில் மற்றொரு இசை அமைப்பாளர் பாடுவது இன்றைக்கு பிரபலமடைந்து வருகிறது.

    ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடியிருக்கிறார். யுவன் சங்கர்ராஜா இசையில் இளையராஜாவும், இளையராஜா இசையில் யுவன் சங்கர் ராஜாவும் பாடியிருக்கின்றனர்.

    முதன் முறையாக தனுஷ் நடிக்கும் மரியான் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் யுவன் சங்கர்ராஜா ஒரு பாடல் பாடியுள்ளார்.

    எம்.எஸ்.விஸ்வநாதன் – யுவன்

    எம்.எஸ்.விஸ்வநாதன் – யுவன்

    தில்லு முள்ளு பட ரீமேக்கில் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் ஜோடி சேர்ந்து யுவன் இசை அமைத்துள்ளார். அது தனக்கு கிடைத்த பாக்கியம் என்று கூறியுள்ளார் யுவன்.

    ஏ.ஆர்.ரஹ்மான் – யுவன்

    ஏ.ஆர்.ரஹ்மான் – யுவன்

    மரியான் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியுள்ளார் யுவன். அப்பா இளையராஜாவின் இசையைத் தவிர முதன் முறையாக யுவன் பாடியது ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தானாம்.

    தனுஷின் வரிகள்

    தனுஷின் வரிகள்

    யுவன் பாடிய வரிகள் தனுஷ் எழுதியதாம். ஏ.ஆர்.ரஹ்மான் - யுவன் காம்பினேசன் சூப்பர் என்று இயக்குநர் பரத் பாலா பாராட்டியுள்ளார். பாடலும் பிரமாதமாக வந்துள்ளதாம். எனவே இதனை திரிவேணி சங்கமம் என்கின்றனர் ரசிகர்கள்.

    மே 3ல் டீஸர்

    மே 3ல் டீஸர்

    மரியான் படத்தின் ‘நெஞ்சே எழு' பாடலுக்கான புதிய டீஸர் மே 3ம் தேதி வெளியிடப்பட உள்ளது. படத்தின் பாடல் கேசட் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

    English summary
    AR Rahman has made Yuvan sing a track for Dhanush starrer Mariyaan. Announcing the news, the director of the film, Bharath Bala tweeted, “Amazining song by AR Rahman sung by Yuvanshankar Raja & lyrics by Dhanush. Coming very soon Mariyaan music!”
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X