பார்டர் படத்தின் ரொமாண்டிக் பாடல் வெளியீடு... சிறப்பான வரவேற்பு

சென்னை : குற்றம் 23 படத்தின் சிறப்பான வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையும் படம் பார்டர்.

இந்தப் படம் நவம்பர் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட படத்தின் ரொமான்டிக் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் அருண் விஜய்

நடிகர் அருண் விஜய்

நடிகர் அருண் விஜய் மற்றும் டைரக்டர் அறிவழகன் கூட்டணியில் கடந்த 2017ல் வெளியான படம் குற்றம் 23. த்ரில்லர் படமாக வெளியான இந்தப் படத்தில் மஹிமா நம்பியார் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். தம்பி ராமையா, வம்சி கிருஷ்ணா ஆகியோரும் படத்தில் இடம் பெற்றிருந்தனர். வசூல் மற்றும் விமர்சன ரீதியாக இந்தப் படம் சிறந்த வெற்றியை பெற்றிருந்தது.

பார்டர் படம்

பார்டர் படம்

இந்நிலையில் தற்போது அருண் விஜய் மற்றும் அறிவழகன் கூட்டணியில் மீண்டும் உருவாகியுள்ள படம் பார்டர். இந்தப் படத்தில் ஆர்மி அதிகாரியாக அருண் விஜய் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஸ்டெபி படேல் ஆகியோர் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

குற்றம் 23 படம் ஏற்படுத்திய தாக்கத்தையடுத்து தற்போது இந்தப் படத்திற்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தப் படத்தின் ரிலீசை அவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் முன்னதாக ஓடிடியில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

அடுத்த மாதம் ரிலீஸ்

அடுத்த மாதம் ரிலீஸ்

ஆனால் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டு வருவதையடுத்து அடுத்த மாதம் 19ம் தேதி பார்டர் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வெளியீட்டை பிரபு திலக் மேற்கொள்ளவுள்ளார்.

கைகொடுக்குமா பார்டர் படம்?

கைகொடுக்குமா பார்டர் படம்?

அருண் விஜய்யின் சமீபத்திய படங்கள் அவருக்கு சிறப்பாக அமைந்து வருகிறது. தேர்ந்தெடுத்த கதைகளில் அவர் நடித்து வருகிறார். தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் அவரை தொடர்ந்து காண முடிகிறது. இந்நலையில் அவருக்கு பார்டர் படமும் சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரொமாண்டிக் பாடல் வெளியீடு

இந்தப் படத்தின் ப்ரமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளன. இந்நிலையில் நேற்றைய தினம் படத்தின் நெஞ்சே நெஞ்சே பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ரொமாண்டிக் பாடலாக இந்தப் பாடல் வெளியாகியுள்ளது.

சாம் சிஎஸ் இசை

சாம் சிஎஸ் இசை

பாடலில் அருண் விஜய் மற்றும் ஸ்டெபி படேல் சிறப்பான ரொமான்சை வெளியிட்டுள்ளனர். பாடலின் காட்சிகள் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளது. சாம் சிஎஸ் இசையில் இந்தப் பாடல் அழகான மெலடியாக வெளிவந்துள்ளது. இந்நிலையில் இந்தப் பாடலுக்கு டைரக்டரும் நடிகருமான கௌதம் மேனன் ட்விட்டர் மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவருக்கு அருண் விஜய்யும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ரசிகர்கள் வரவேற்பு

ரசிகர்கள் வரவேற்பு

இந்நிலையில் வெளியான சில மணி நேரங்களிலேயே யூடியூப் பக்கத்தில் இந்தப் பாடலுக்கு சிறப்பான வரவேற்பு காணப்படுகிறது. 2 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பாடலை பார்த்துள்ளனர். இந்தப் பாடலுக்கான வரவேற்பின் மூலம் படத்திற்கான எதிர்பார்ப்பும் தெரியவருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X